சனி, 23 மார்ச், 2024

சாகும்போதும் ‘சத்குரு’தானா?!?!

நோயாளி எப்படி மருத்துவரிடம் பொய் பேசக்கூடாதோ, அதே போல நோயாளியின் உடல்நிலை குறித்து மருத்துவரும் பொய் சொல்லுதல் கூடாது. 

உண்மையும் நேர்மையும் அவர்களின் இரு கண்கள்.

அதிகார வர்க்கத்தின் தூண்டுதலாலோ அதீத பக்தி காரணமாகவோ டெல்லி அப்பல்லோ மருத்துவர்[ஜக்கி வாசுதேவனுக்கு மூளை அறுவை செய்தவர்]“சத்குரு தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்கிறார்” என்று பேசி இந்திய மருத்துவர்கள் மீது மக்கள்[உலக அளவில்] கொண்டுள்ள நன்மதிப்பைச் சிதைத்திருக்கிறார்.

“எங்கள் கடமையை நாங்கள் செய்தோம், ஜக்கி என்னும் நோயாளி படிப்படியாக, நாங்கள் எதிர்பார்த்ததையும்விட[உண்மை நிலவரப்படி] வேகமாகக் குணமடைந்துவருகிறார்” என்று அறிக்கை விடவேண்டிய இவர் மேற்கண்டவாறு சொல்லித் தன் தரத்தைத் தாழ்த்திக்கொண்டிருக்கிறார்.

நம் மக்களில் சிந்திக்கத் தெரிந்த பலரும் கேட்ட கேள்வியை நாம் அழுத்தம் திருத்தமாக இங்கே பதிவு செய்கிறோம்.

தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ளும் இந்த நபருக்கு இவர்கள்[மருத்துவர் குழு] ஏன் அவசர அறுவைச் சிகிச்சை செய்தார்கள்? எதற்காக நோயாளியைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்? 

இந்த ஆள் சாகும்போதும்[நூறு நூறு ஆண்டுகள் வாழ நம் வாழ்த்துகள்] மனிதனாக அல்லாமல் கடவுளின் குருவாக[சத்குரு]ப் பார்க்கப்பட வேண்டும் என்று நினக்கிறார்களா?

இவரின்[டாக்டர்]  நடவடிக்கையால், ஒட்டுமொத்த உலகமும் இவரையும், இவ்வாறு அறிக்கைவிடத் தூண்டியவரையும் பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது!

 [According to Dr. Suri, "Sadhguru has shown steady progress, and his brain, body, and vital parameters have improved to normal levels. His recovery has been much better than expected."

Dr. Suri mentioned that Sadhguru is healing himself, in addition to the medical measures instituted by the Indraprastha Apollo Hospitals.

https://www.freepressjournal.in/india/sadhguru-health-updates-sadhguru-is-healing-himself-says-doctor-after-surgery