‘நீல’ப் பட நடிகைகளை A, B, C என வகைப்படுத்துகிறார்கள் அத்துறை ஆய்வு வல்லுநர்கள்.
'A’ தரத்தில் உள்ளவர்களைத் தயாரிப்பாளர்கள் தேடிப் போவார்கள்; கேட்கும் ஊதியத்தைக் கொடுப்பார்கள்; மிகவும் மரியாதையாக நடத்துவார்கள்.
Bயும் Cயும் நம் சினிமாக்களின் துணை நடிகைகள் போல! அவர்களுக்கு மேற்சொன்ன கவுரவங்கள்... ஊஹூம்.[Jonathan Morgan, ex .... director, The Guardian, march 17, 2001].
“நீலப் படங்களில் நடிப்பதென்பது மிகப் பயங்கர அனுபவம். இதில் ஈடுபடும்போது, பெண்கள் வலியால் துடிப்பார்கள்; அலறுவார்கள். இவர்களில் பலரும் பாலியல் தொற்று நோய்களுக்கும், H.I.V தொற்றுக்கும் ஆளாகிவிட்டவர்கள்” என்றிப்படித் தன் அனுபவங்களை அடுக்குகிறார் ஓர் ஆபாசப் பட நடிகர்[male....performer [at the Los Angeles Hearings of The Attorney General Commission, 2005]
தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சிறிது காலத்திலேயே குடும்ப உறவுகளால் புறக்கணிக்கப்பட்டுத் தனிமைப்படுத்தப்படுகிறார்கள் இவர்கள். போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, மனநோயாளிகளாய் மாறுகிறார்கள்.
இத்தொழிலில் ஈடுபட்டவர்களில் மிகப் பலரின் குறிப்பாக B&C பெண்களின் வாழ்க்கை பாழாகியிருக்கிறது. 75%---80% பேர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டவர்கள். நிறையத் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளன.
***செய்திகளுக்கான ஆதாரத் தள முகவரி கைவசம் இல்லை என்பதை மிக்க வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.