செவ்வாய், 12 மார்ச், 2024

நீதியரசர்களின் அரசர்களா நம் வாசகர்கள்?!?!

//சிறார் தொடர்பான ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக இளைஞர் ஒருவர் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்குக்கான விசாரணை திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இதற்கிடையே, அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இளைஞர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், “தனிப்பட்ட முறையில் ஆபாசப் படங்களைப்[‘சிறார் தொடர்பான ஆபாசப் படம்’என்பதை அவர் மறந்தது பேராச்சரியம்] பார்ப்பது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படாது. அதனைப் பிறருக்கு அனுப்புவதுதான் சட்டப்படிக் குற்றம்” என்று தீர்ப்பு வழங்கியிருந்தார்.

அவரின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, குழந்தைகள் உரிமைக்கான கூட்டணி என்ற அமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 


முறையீடு தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

"ஒரு நீதிபதியால் எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூறமுடிந்தது? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் கருத்து கொடுமையானது" என்று அனந்த் வெங்கடேஷைத் தலைமை நீதிபதி சந்திர சூட் கடுமையாக விமர்சித்துள்ளார்; இந்த வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்//


செய்தியைத் தொடர்ந்து அது தொடர்பான வாசகர்களின் கருத்துரைகளையும் வாசிக்க நேர்ந்தது.


பதிவுகளில் கடுஞ் சொற்களைப் பயன்படுத்தவே நம்மைப் போன்றவர்கள் பல முறை யோசித்து முடிவெடுக்கும் நிலையில், தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளையே மிகக் கடுமையாக விமர்சிக்கும் வாசகர்களின் அஞ்சாமை நம்மை மலைக்கச் செய்கிறது..


வாசகர் கருத்துரைகள்[பின்னூட்டங்கள்]:

============================================================================
Raj
***இந்த ஆனந்த் வெங்கடேஷ், தான் இந்தியாவிலேயே பெரிய அறிவாளியான நீதிபதி என்று நினைத்துக்கொண்டு திரிகிறான். சட்டத்தின் மீதான இவனது அக்கறை, ஒரு biased அக்கறை மட்டுமே***

11ShareReply

Suri2h

***இந்த முந்திரிக்கொட்டை நீதிபதிக்கு இது எல்லாம் தேவையா?? இதுல வேற பட்டை பட்டையா இழுத்துக்கொண்டு நடுவுல பொட்டு வேற!!!! இப்படிப் பட்டை மற்றும் பொட்டு போட்டுக்கொண்டிருக்கும் உருப்படிகள் அருகிலேயே குழந்தைகளைச் சேர்க்க கூடாது!!!!***

============================================================================                                      
இவை போன்ற, கடும் பிரச்சினைகளுக்கு வித்திடும் கருத்துரைகளை அவ்வப்போது இணையத்தளங்களில் காண முடிகிறது. இப்போக்கு கண்டிக்கத்தக்கதா, கண்டும் காணாமல் புறக்கணிக்கத்தக்கதா?!.

நீதிபதிகளென்ன, ஆட்சியாளர்கள் என்ன, இந்த நாட்டின் தலைவிதியையே நிர்ணயிக்கிற சர்வ வல்லமை படைத்த குடிமகன்கள் என்னும் இவர்களின் மனோபாவம்தான் இதற்குக் காரணமோ?!

* * * * *

https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-chief-justice-chandrachud-opinion-against-chennai-hc-judge-anand-venkatesh-590101.html?story=3