பிடிக்காத கணவனை[குறிப்பாக ‘அது’ விசயத்தில்] உணவில் நஞ்சு சேர்த்தோ, தூக்க மாத்திரை கலக்கியோ, கள்ள உறவில் கலக்கும் கில்லாடியுடன் இணைந்து கழுத்தை நெறித்தோ, தலையணையால் மூச்சை நிறுத்தியோ கொல்லுவது போலவே, லட்சங்களில் கூலி கொடுத்து அடியாட்களைக்கொண்டு தீர்த்துக்கட்டுவதும்[முயற்சி தோல்வியில் முடிவதும் உண்டு] அதிகரித்துவருகிறது.
இத்தனைக் காலமும் ஆதிக்க வெறியில் திளைத்த ஆண் இனம் பெண்ணினத்திற்குச் செய்த/செய்யும் அநீதிகள்/கொடுமைகள் சொல்லி மாளாது.
ஒருத்தி சலித்துப்போனால் இன்னொருத்தியை மணப்பது; அவளோடு திருப்தி அடையாத நிலையில் மேலும் ஒருத்தி; அப்புறமும் அடங்காத அந்தரங்க ஆசைக்கு ‘வைப்பு’. அது ஒன்றாகவோ பலவாகவோ இருக்கலாம். வைத்துக்கொள்வதும் விலக்கிவைப்பதும் விரட்டியடிப்பதும் அவ்வப்போது நிகழும். அவள்கள் அவர்களைக் கண்டித்தால் தயவு தாட்சண்யமின்றிப் போட்டுத்தள்ளுவதும் நடக்கும்.
ஆக, ஆண்வர்க்கம் பெண்களுக்கு இழைத்தக் கொடுமைகளும், அடித்த கொட்டங்களும் வார்த்தைகளில் அடங்காதவை.
இப்போது.....
கட்டிக்கொண்டவன் கவைக்குதவாதவன் என்றால், மணவிலக்குச் செய்தோ செய்யாமலோ ‘அது’ விசயத்தில் அசத்துகிறவனுடன் சேர்ந்து வாழ்கிறார்கள் பெண்கள்.
சேர்ந்து வாழ்வது சாத்தியமில்லை என்றால், அவ்வப்போது திருட்டுத்தனமாய் ஒட்டி உறவாடுவது நடக்கிறது; ஓடிப்போவதும் உண்டு.
வீட்டிலிருந்துகொண்டே, அயலானுடன் காமச் சுகம் அனுபவிக்கும் அசகாயசூரிகளும் இருக்கிறார்கள்.
இதற்கு முட்டுக்கட்டை போடும் கட்டியப் புருசனை, சாத்தியமான வழிகளிலெல்லாம் தீர்த்துக்கட்டுவதும் நடக்கிறது.
இதிலெல்லாம் ஆச்சரியப்படவோ அதிர்ச்சியடையவோ ஏதுமில்லை.
அன்றிலிருந்து இன்றுவரை ஆண்கள் செய்த/செய்யும் அட்டூழியங்களுக்குத்தான் இன்றையப் பெண்கள் பதிலடி கொடுக்கிறார்கள்!
“ஆகா, பெண்ணினம் சீரழிந்துவிட்டது; சமூகக் கட்டுப்பாடு சிதைந்துவிட்டது” என்றெல்லாம் ஆத்திரப்படவோ, கொதித்துக் கொந்தளிக்கவோ தேவையில்லை. அவற்றால் பயன் ஏதும் இல்லை!
காரணம், இவையெல்லாமே இயற்கை நிகழ்வுகள்! இறை நம்பிக்கையாளர்களுக்கு ‘அவன்’இன் திருவிளையாடல்கள்!!
* * * * *
தொடர்புடைய செய்தி:
இப்பதிவை எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்த காணொலி:
