எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

மது அருந்தாமலே போதையூட்டும் ‘குடல் நொதித்தல்’ நோய்!

சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்காவில் ஒருவர் சட்டப்பூர்வ வரம்பைத் தாண்டி, மூன்று மடங்கு அதிகமாகக் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாகக் கைது செய்யப்பட்டது ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது.

இதில் சுவாரசியம் என்னவென்றால், அன்று அவர் கொஞ்சமும் மது அருந்தாதபோதும், அவருக்கு ரத்தத்தில் அதிக அளவு ஆல்கஹால் இருந்ததாகக் காவல்துறையினரின் சோதனைக் கருவியில் பதிவானதுதான்.

விபத்து நடந்த அன்று அவர் மது அருந்தவில்லை என்பதை மருத்துவப் பரிசோதனைகள் உறுதிப்படுத்தின. 40 வயதான ‘ரே லீவிஸ்’, குடல் நொதித்தல்(Auto-brewery syndrome) என்ற அரிய வகை நோயால்* பாதிக்கப்பட்டிருந்தார் என்பதும் மருத்துவச் சோதனைகள் மூலம் அறியப்பட்டது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் தானாக ஆல்கஹால்[போதையூட்டும் திரவம்] உற்பத்தி செய்யப்படுகிறது(2014இல் ரேயின் விபத்து ஏற்படுத்திய விளைவைப் பதிவு செய்த, அமெரிக்க தொலைக்காட்சிச் சேனலான ‘ஃபாக்ஸ் 13’ சியாட்டல் வெளியிட்ட செய்தி இது].

                                        *   *   *   *   *

***ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம்(ABS) அல்லது குடல் நொதித்தல் நோயால் குடல் பிரச்சினைகள் உள்ள நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோயாளிகள் பொதுவாக, சர்க்கரை & கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் உள்ள உணவை உண்பதாகத் தெரிவிக்கின்றனர்; மது அருந்தாதபோதும்கூட மது போதையின் பல அறிகுறிகளைப் பெறுகிறார்கள்.

மிகச் சரியான கூடுதல் தகவல்களுக்கு:

https://www-news--medical-net.translate.goog/health/Auto-Brewery-Syndrome-How-Your-Gut-Can-Turn-Carbs-into-Alcohol.aspx?தாதபோதும்கூட_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=imgs

                                        *   *   *   *   *

*குடல் நொதித்தல்?

‘குடல் நொதித்தல்’ என்பது, விலங்குகளின் செரிமான மண்டலத்தில் நடக்கும் ஒரு இயற்கையான செயல்முறையாகும். இதில், நுண்ணுயிரிகள் உணவை உடைத்து, ஹைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களை வெளியிடுகின்றன. இது விலங்குகளில் பொதுவாக நடக்கும் ஒரு நிகழ்வாகும்.