//“தமிழகத்தில் ராமர் ஆட்சி மலரும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் நிறையக் கட்சிகள் சேரும். நிச்சயம் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்” என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்//[இந்து தமிழ்*]
*ராமன் திரேதா யுகத்தில் 12,00,000[பன்னிரண்டு லட்சம்] ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தான் என்கிறார்கள் அயோத்தி ராமனின் அடிமைகள். சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரான வரலாற்று நிகழ்வுகளுக்கே போதிய ஆதாரம் இல்லாத நிலையில் 12,00,000 ஆண்டுகளுக்கு முன்பு இவன் பிறந்தான் என்பதற்கு உரிய ஆதாரங்களைப் பட்டியலிடுங்கள் நயினாரே. இவன் எப்படி ஆட்சி புரிந்தான் என்பதை ஆராய்வது அப்புறம்.
*வால்மீகி ராமாயணத்தில் அயோத்தியா காண்டம் சரகம் 8, சுலோகம் 12ஐ ஆதாரமாகக் காட்டி, ராமன் பல பெண்களை வைப்பாட்டிகளாக வைத்திருந்தான் என்னும் செய்தி ஏற்கனவே சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது[http://www.ttamil.com/2020/03/blog-post_3.html]. இதை மறுப்பதற்கான ஆதாரம் ஏதும் உம்மிடம் உள்ளதா?
*11,000[பதினோராயிரம்] ஆண்டுகள் அவன் ஆண்டதாகவும் கதைத்திருக்கிறார்கள் புளுகர்கள். 12,00,000 ஆண்டுகளுக்கு முன்பாகட்டும் பின்னராகட்டும் ஒரு மனிதன்[கடவுள் அவதாரம் என்னும் கதையெல்லாம் வேண்டாம்] இத்தனை ஆண்டுகள் வாழ்வது சாத்தியமா என்பது பற்றியும் சிந்தியும். ஆழ்ந்து சிந்திக்கத் தெரியாதென்றால் ராம ராஜ்ஜியம், லட்சுமணன் ராஜ்ஜியம் என்று இனியும் உளறாதீர்.
*உம்முடைய ஆறு அறிவுகளையும் பயன்படுத்தி மேற்கண்ட கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் பதிலளிக்க இயலுமா என்று யோசியும் நயினாரே.
தேவைப்பட்டால் ராமன் ஆட்சிபுரிந்து சாதித்துக் கிழித்தவை பற்றிப் பின்னர் ஆராய்வோம்.
* * * * *
