"திருப்பரங்குன்றம் வழக்கில் இன்று வந்திருப்பது இறைவனின் தீர்ப்பு” என்று சற்று முன்னர், ஊடகவியலாளர் பேட்டியில் நயினார் நாகேந்திரன் கூறினார்[ராஜ் தொ.கா].
குறிப்பாக, தமிழர்களுக்கிடையேயான வழக்கில் இறைவன் தீர்ப்பளித்தது ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் பரவசத்தில் ஆழ்த்துகிறது.
ஒரு தமிழனாக நாமும் பரவசப்படுகிறோம். நயினார் நாகேந்திரன் அவர்களிடம் ஒரு கோரிக்கையையும் சமர்ப்பிக்கிறோம்.
நயினார் அவர்களே,
நீங்கள் 100% உண்மையான பக்தர் என்பதால்தான் இறைவனே தாமாக முன்வந்து உதவியிருக்கிறார்.
ஆகவே, இனியும் இந்தியாவெங்கும் உள்ள இது மாதிரியான வழக்குகளில் உதவுமாறு, பரிசுத்தப் பக்திமானான நீங்கள் வேண்டிக்கொண்டால், சந்தேகத்திற்கு இடமின்றி இறைவன் மனமுவந்து உதவி செய்வார்.
வேண்டிக்கொள்ளுங்கள் நயினார்.
உங்கள் வேண்டுதலுக்குப் பிறகு இந்த மண்ணில் நீதிமன்றங்களின் தேவையே இல்லாமல்போகும். இவற்றிற்காக அரசு கோடிக்கணக்கிலான ரூபாய் செலவிடுவது தவிர்க்கப்படும்.
இனியும் தங்களின் மக்கள் பணி சிறக்க மனமுவந்த வாழ்த்துகள்!

