எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 24 செப்டம்பர், 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’... ஓர் உதவாக்கறைத் திட்டம்!?

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்தவர்  விஜயா.

இவர் தன் மாமனார் அய்யங்கண்ணு பெயரிலிருந்த ஒன்றரை செண்ட் நிலத்தைத் தன் கணவன் பாஸ்கர் பெயருக்கு மாற்றுவதற்காக[பட்டா பெயர் மாற்றம்], ஆகஸ்டு மாதம் 21ஆம் தேதி கூடங்குளத்தில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனு அளித்தார்.

மனுவின் மீது விசாரணை மேற்கொண்ட கூடங்குளம் கிராம நிர்வாக அதிகாரி, பட்டாப் பெயர் மாற்றம் செய்வதற்காக விஜயாவிடம் ரூ25000 லஞ்சம் கேட்டிருக்கிறார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத விஜயா, லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் செய்ய, அவர்கள் வழக்கமான தந்திர உத்தியைக் கையாண்டு நிர்வாக அதிகாரியைக் கைது செய்தது நமக்கு முக்கியமல்ல, அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என்பதால்.

நாம் வருத்தத்துடன் குறிப்பிட விரும்புவது:

மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தேர்தல்களில் வாக்குத் திரட்ட உதவலாமே தவிர வேறு நன்மை ஏதும் இல்லை என்பதுதான்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டமோ, உதயநிதி ஸ்டாலின் திட்டமோ முகாம்களில் பெறப்படும் மக்களின் விண்ணப்பங்கள், திட்டத்தைச் செயல்படுத்தக் கடமைப்பட்டுள்ள ஊழல் பெருச்சாளிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

அப்புறம் நடப்பது? 

மேற்கண்டதே ஓர் உதாரணம்.

ஸ்டாலினோ எடப்பாடியோ சீமானோ  எந்தக் கொம்பாதி கொம்பன் முதலமைச்சராக இருந்தாலும் லஞ்சலாவண்யத்தில் ஊறித் திளைக்கும் நம் அரசு அதிகாரிகளை[மிகப் பெரும்பாலோர்]த் திருத்துவது இயலவே இயலாதது.

                                        *   *   *   *   *

https://www.dinamalar.com/amp/news/india-tamil-news/vao-caught-red-handed-accepting-rs-25000-bribe-for-change-of-title-deed/4040325