எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 17 மார்ச், 2025

அன்று[1992] பாபர் மசூதி! இன்று ஔரங்சீப் கல்லறை!! நாளை?!

மகாராஷ்டிராவின் ஔரங்காபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை பஜ்ரங் தளம் மற்றும் விஸ்வ இந்து பரிஷத்(VHP) தீவிரப்படுத்தியுள்ளன. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பாபர் மசூதி இடிப்பு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் குழுக்கள் மிரட்டியுள்ளன[ஊடகச் செய்தி*].

சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள குல்தாபாத்தில் அமைந்துள்ள ஔரங்கசீப்பின் கல்லறை பிரிவினையின் சின்னம் என்பதும், வகுப்புவாத ஒற்றுமையைச் சீர்குலைப்பதை ஊக்குவிக்கிறது என்பதும் கல்லறையை இடிப்பதற்கு அவர்கள் கூறும் காரணம்.

இந்த விவகாரம் தீவிரம் அடைந்துள்ளது.

முன்பு பாபர் மசூதி குறித்துப் பிரச்சினைகள் உருவாகி, விவாதங்கள் சூடுபிடித்து, ஆளும் கட்சியின் ஆதரவுடன் அது விஸ்வ இந்து பரிஷத் & அதன் கூட்டணி அமைப்புகளின் ஆர்வலர்களால் உடைத்து  நொறுக்கப்பட்டது. அது நடந்தது டிசம்பர் 6, 1992இல்[ராமஜென்ம பூமி என்று சொல்லப்படும் அந்த இடத்தில்தான் ராமருக்குப் பிரமாண்டமான கோயில் கட்டியுள்ளார் மோடி].

அதே போன்றதொரு பிரச்சினைக்கு இன்று இலக்காகியிருக்கிறது ஔரங்சீப் கல்லறை.

விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்று அஞ்சி மகாராட்டிர அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்த ஏற்பாடு தொடருமா, மேலிடத்து அழுத்தம் காரணமாகப் பாதுகாப்பு நீக்கப்பட்டு, பாபர் மசூதிக்கு ஏற்பட்ட கதியே ஔரங்சீப் கல்லறைக்கும் ஏற்படுமா என்பது இன்றில்லாவிட்டாலும் சில மாதங்களுக்குப் பின்னர் தெரியக்கூடும்.

ஒருவேளை.....

கல்லறை இடித்து நொறுக்கப்பட்டால்[அங்கே அனுமான் குரங்குக்கா, சீதாப்பிராட்டிக்கா லட்சுமணனுக்கா யாருக்குக் கோயில் கட்டுவது என்பது பின்னர் தீர்மானிக்கப்படும்] அடுத்ததாக, இங்குள்ள இஸ்லாமியர்களாலும் வகுப்புவாத ஒற்றுமை சீர்குலைக்கப்படும் என்று காரணம் காட்டி, அண்டை அயலிலுள்ள நாடுகளுக்கு அவர்கள் விரட்டப்படக்கூடும்.

அவ்வாறு அவர்கள் வெளியேற்றப்பட்டுவிட்டால் இந்து வெறியர்களின் அடுத்த இலக்கு.....

அவர்களுக்கு அடிபணிய மறுக்கும் இனத்தவரை[குறிப்பாகத் தமிழரை] இந்த நாட்டைவிட்டு வெளியேற்றுவதுதான்.

தாங்கள் வெளியேற்றப்படும் அபாயம் குறித்துத் தமிழர்கள் இப்போதே தீவிரமாகச் சிந்தித்து, தங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்வது நல்லது என்பது நம் எண்ணம்.

                                       *   *   *   *   *

*Authorities Restrict Direct Entry To Aurangzeb's Tomb After Hindu Groups Threaten Babri-Like Action; Security Heightened In Sambhaji Nagar

நிரந்தரப் பிரதமர் ஆவதற்கு இந்தப் ‘பஞ்சப்பாட்டு’ போதாது மோடி அவர்களே!

மேதகு மோடிஜி அவர்களே, 

இதற்கு முன்பு தேர்தல்களில் போட்டியிட்டபோதெல்லாம், “என் அப்பா தேனீர்க் கடை நடத்தியபோது நான்தான் எச்சில் தம்ளர் கழுவினேன்” என்று சொல்லிச் சொல்லியும், கோயில் கண்ட இடமில்லாம் குப்புறக் கவிழ்ந்து விழுந்து சாமி கும்பிட்டும், எனக்கென்று குடும்பம் ஏதுமில்லை. மக்களின் ஒவ்வொரு குடும்பமும் என் குடும்பமே என்றிப்படிப் பேசிப் பேசியும் மக்களின் அனுதாபத்தைப் பெற்று குஜராத் மாநில முதல்வராகிப் பின்னர் இந்திய நாட்டின் பிரதமராகவும் ஆனீர்கள்.

இந்த நாட்டின் நிரந்தரப் பிரதமராக நீடிக்க வேண்டும் என்பது உங்களின் ஆசை.

அந்த ஆசை நிறைவேற, உங்கள் மீது மக்களுக்குள்ள அனுதாபத்தை இழந்துவிடாமல் இருப்பதோடு, அதை அதிகரிக்கும் திட்டத்தில்தான் உங்களின் பிள்ளைப் பருவச் சோகக் கதையை மேற்கண்டவாறு பிழிந்து தந்திருக்கிறீர்கள்.

ஆனால், "ஆர்.எஸ்.எஸ். போன்ற புனிதமான அமைப்பின் மூலமாக நான் வாழ்க்கையின் நோக்கத்தையும் விழுமியங்களையும் கற்றுக்கொண்டதை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன்” என்று அண்மையில் நீங்கள் பேசியது எதிர்மறையான விளைவுகளை உண்டுபண்ணும் என்பதை மறந்துவிட்டீர்கள்


பஜ்ரங்கள், விஸ்வ ஹிந்து பரிஷத், அனுமன் சேனா, ஹிந்து ஜன் ஜக்ருதி சமீதி, ஹிந்து யுவ சேனா போன்ற பல பெயர்களில் செயல்படுகின்ற பாசிசக் குண்டர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ். காரர்கள். 


 பகுத்தறிவாளர்களும் மூடநம்பிக்கை ஒழிப்பாளர்களுமான ரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே (2015), கல்புர்கி (2015), கவுரி லங்கேஷ் (2017) போன்றோரைக் கொன்றவர்கள் இவர்களே. 


நாட்டில் நடைபெற்ற/நடைபெறும் மிகப் பெரும்பாலான மதக் கலவரங்களைத் தூண்டிவிட்டு, உயிர்ப் பலிகளுக்கும் கொள்ளைகளுக்கும் காரணமாக இருந்தவர்களும், இந்தி வெறியையும் இந்துத்துவா வெறியையும் தூண்டுகிறவர்களும் இவர்களே. 


இந்த அயோக்கியர்களைப் ‘புனிதர்கள்’ என்று நீங்கள் புகழ்ந்தது மிகப் பெரிய தவறு. இதனால், மக்களுக்கு உங்கள் மீதான அனுதாபம் குறைத்துவிட்டது என்று உறுதிபடச் சொல்லலாம்.


நம் மக்களுக்கு மீண்டும் உங்கள் மீதான அனுதாபம் அபிரிதமாக அதிகரிக்க வேண்டுமாயின்.....


ஒரு வேளை உணவுகூட உண்ணாமல் மாதத்தில் பல நாட்கள் பட்டினி கிடந்தது, சொந்தபந்தங்களிடம் கையேந்தி உதவி பெற்று கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டதாரி ஆனது போன்ற சோக நிகழ்வுகளைத் தொகுத்து வெளியிடுங்கள்.


இறுதியில் உங்கள் பெயருக்கு முன்னால், ‘கடவுளால் அனுப்பப்பட்டவர்’ என்னும் வாசகத்தைச் சேர்க்க மறவாதீர்கள்.


வெல்க உங்கள் முயற்சி! தொடர்க உங்கள் மக்கள் பணி!!

                                     

                                         *   *   *   *   *


https://www.maalaimalar.com/news/national/rss-taught-me-the-purpose-of-life-pm-modi-764704