எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 13 ஆகஸ்ட், 2025

மரங்களைக் கடவுள்களாக்கிக் கல்யாணம் பண்ணும் காட்டுமிராண்டிகள்!!!

ரசு, வேம்பு ஆகிய இரு மரங்களுக்குத் திருமணம் என்னும் சடங்கு கோவில்களில் அல்லது புனித இடங்களில் நடத்தப்படுகிறது.

இதில் அரச மரம் சிவபெருமானாகவும், வேப்ப[வேம்பு] மரம் பார்வதி தேவியாகவும் கருதப்படுகின்றன.


அரச மரத்திற்கு வேட்டியும், வேப்ப மரத்திற்குப் புடவையும் அணிவிக்கப்பட்டு, மரங்களுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் திருமணம் நடத்தப்படுகிறது. தாலி கட்டுபவர் என்னவோ சிவாச்சாரிதான்.


இந்தச் சடங்கின் முக்கிய நோக்கம், இயற்கைக்கும், கடவுளுக்கும் உள்ள தொடர்பை நிலைநிறுத்துவது என்கிறார்கள் சடங்கர்கள். இதனால் நல்ல மழை பெய்யும்; விவசாயம் செழிக்கும்;

உலகுக்குப் பல நன்மைகள் விளையும் என்றும் கதைக்கிறார்கள்


இந்தச் சடங்கால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்றும் புளுகுகிறார்கள்.


சில இடங்களில், இந்த திருமணச் சடங்கிற்காக அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு, வெற்றிலை பாக்குடன் கிராம மக்களுக்கு வழங்கப்படுகின்றன. பலர் இந்தத் திருமணத்தில் கலந்துகொள்கிறார்கள்.


இந்தப் புத்தி கெட்டவர்கள் நடத்தும் இந்தக் கல்யாணத்தால், 

இவர்கள் சொல்வதுபோல் மழை பெய்வதில்லை; மரங்களுக்கும் 

பயனில்லை; உலகுக்கும் நன்மை ஏதும் விளைவதில்லை[உரிய முறையில் நிரூபிக்கப்பட்டதில்லை].


ஆனாலும், இந்த மடத்தனமான செயலை விடாப்பிடியாக அவ்வப்போது செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.


அரச மரமும் வேப்ப மரமும் இணையாகத் தோன்றி வளர்வது தற்செயலான இயற்கை நிகழ்வு.

இரண்டும் ஒட்டி வளர்வதைப் புனிதமானது[?] என்று நம்பி, அவற்றைக் கடவுள்களின் மறு வடிவம் என்று பொய் சொல்லி, அவற்றிற்குத் திருமணம் செய்விப்பது பகுத்தறிவுக்கு ஒவ்வாத படுமூடத்தனமான செயலாகும்.

உண்மையில், சிவபெருமான் என்று ஒரு கடவுள் இருந்தால்.....


சிவாச்சாரி தன் மனைவியான பார்வதி தேவிக்கு[வேம்பு]த் தாலி கட்டும்போது தன்னிடம் உள்ள சூலாயுதத்தால் அந்தச் சாரியைக் 

குத்திக் குடலை உருவிப்போட்டால்தான் இந்தச் சடங்கு செய்வது 

நிறுத்தப்படும் என்று தோன்றுகிறது.


காணொலி: