சுகபோக வாழ்க்கைக்கான வசதிகள் நாளும் பெருகிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், ஆசை, பாசம், அந்தரங்கச் சுகங்கள் என்று அனைத்துப் பற்றுகளையும் துறந்து வாழ்பவர்கள் இல்லை என்றே சொல்லலாம்.
ஏற்புடைய வாழ்விடம் அமைந்தால், தமக்கிருக்கும் கொஞ்சமே கொஞ்சம் பற்றுகளுடன் வாழ்பவர்களால், அவற்றிலிருந்து முற்றிலுமாய் விடுபடுவது சாத்தியம் ஆகுமா என்னும் கேள்வி என்னுள் எழுந்தது.
இக்கேள்வியைக் கூகிள் தேடுபொறியில் பதிவு செய்ததில் அதன் செயற்கை நுண்ணறிவு[AI] அளித்த பதில் கீழே[முற்றும் துறந்து வாழ்வதற்கான இடங்கள்]:
*இமயமலையில், மடாலயங்கள், தியானக் குகைகள், லடாக்கில் உள்ள ‘தங்க்யுட் கோம்பா’, ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் குகைகள் என்று பனி சூழ்ந்த இடங்களில் துறவிகள் தங்கியிருக்கிறார்கள்.***இங்குள்ள பொல்லாத மனிதர்களையும், மனம் பதறச் செய்யும் கொடூர நிகழ்வுகளையும் கண்டு கண்டு நொந்து நூலாகிப்போனவர்கள், விரும்பினால் மேற்கண்ட இடங்களில் ஒன்றிலோ பலவற்றிலுமோ ஒரு துறவியாகத் தங்கியிருந்து, மன நிம்மதியுடன் வாழ்நாளைக் கழிக்கலாம்.
செல்பவர்கள் மறவாமல் மானசீகமாக அடியேனுக்கு நன்றி சொல்லுங்கள். ஹி... ஹி... ஹி!!!
