வீடு மறந்து, நாடு துறந்து, ஓய்வில்லாமல், விதம் விதமாய் ஆடம்பர உடையணிந்து மோடி உலகம் சுற்றியது பிற நாட்டுத் தலைவர்களுடன் கைகுலுக்கவும், இறுக்கமாகக் கட்டித் தழுவவும், புன்சிரித்துப் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், விருந்துண்ணவும்தானா? இவற்றால் நம் மக்கள் பெற்றப் பயன்கள் என்ன[நன்மைகளா, தீமைகளா?] என்றெல்லாம் நம் மனதில் கேள்விகள் எழுந்தன கீழே இடம்பெற்றுள்ள அவலச் செய்தி[+காணொலிகள்> கீழே]யை வாசித்தறிந்தபோது.
வாசியுங்கள்; சிந்தியுங்கள்.
கனடாவில், இந்தியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் எதிரான தாக்குதல்கள்[ஹிந்துக் கோவில்கள் மீதும் நடத்தப்படுகின்றன; காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் இந்தியர்களுக்கு எதிராகச் செயல்பட்டுவருகின்றன; இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்களை எழுதப்படுகின்றன] தொடர்ந்து நடத்தப்படுகின்றன. பாதுகாப்புக் கருதி அங்குள்ள திரையரங்குகள் இந்தியத் திரைப்படங்களைத் திரையிடுவதைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன[dinamalar.com].
* * * * *
