கடவுள் ஏன் நம்மைப் படைத்து இந்த உலகில் உலவ விட்டார் என்ற வினா, சதா காலமும் நம் மண்டையைக் குடைந்து குடைந்து நிம்மதியைக் குலைத்துக்கொண்டே இருக்கிறது.
பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
வெள்ளி, 3 பிப்ரவரி, 2023
இவனா? இவன் நல்லவனா? இவனா நல்லவன்?!
சத்குருவும் ‘சத்சத்’குருக்களும்!!!
கடவுளின் குருவும் பிறவி ஞானியுமான ‘ஜக்கி’ திருவாய் மலர்ந்தருளிய தத்துவ முத்துகளில் கணிசமானவற்றை இங்கு பகிர்ந்துள்ளேன்.
இவற்றில், குறைந்தபட்சம் ஏதேனும் ஒன்றை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்றால் உங்களை நீங்களே, ‘சத்’சத்குரு என்று அழைத்துக்கொள்ளலாம்.
உங்களுக்குச் சரளமாக ஆங்கில பேச முடியுமென்றால், ஏதேனும் ஒரு மலையடிவாரத்தில் புறம்போக்கு நிலங்களை வளைத்துப்போட்டு ஆசிரமம் உருவாக்குங்கள்.
ஆசிரமத்தில் ‘அபூர்வயோகி’ சிலை நிறுவி, அதைப் பிரபலமானவரை[பிரியமானவராகவும் இருத்தல் நல்லது]க்கொண்டு திறக்கச் செய்திடுவீர்.
மூஞ்சி முழுக்கத் தாடி மீசை வளர்த்து[அதுக்குக் கொடுப்பினை வேண்டும்] விதம் விதமாய் விலையுயர்ந்த ஆடையுடுத்து, “சத்சத்குரு என்னும் பெயரில் ஆன்மிகம் போதித்து ‘மகாசமாதி’ மூலம் சொர்க்கபுரி செல்லப் பயிற்சி தரப்படும்” என்று அடித்துவிடுங்கள்.
செலவைப் பொருட்படுத்தாமல் ஊடகங்களில் விளம்பரம் செய்தல் மிக அவசியம்.
உங்களைத் தேடி அணி அணியாய் மக்கள் திரண்டு வருவார்கள்.
ஆங்கிலத்தில் புரியாத தத்துவங்களை அள்ளித் தெளியுங்கள். கை தட்டி ரசித்து, நன்கொடைகளை அள்ளி வழங்கும் மூடர் கூட்டம் உலகெங்கிலும் உள்ளது. அப்புறம்.....
அப்புறம் என்ன, சொகுசுக் கார்கள், ஹெலிகாப்டர்கள் என்று உலகம் சுற்றலாம்; உல்லாச புரிகளில் பவனி வரலாம்.
வாசிப்பைத் தொடருங்கள்.
