எனது படம்
பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் முதன்மை நோக்கம். எவரொருவரையும் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. நான் தொடர்ந்து பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

செவ்வாய், 21 அக்டோபர், 2025

அயல் கோள் குடியேற்றம்! ஆராய்கிறார்களாம்!! வெங்காயம்!!!

//சூரியக் குடும்பத்தில் பூமிக்கு அடுத்தபடியாக இருப்பதும், சிவப்புக் கோள் என்றழைக்கப்படுவதுமான செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்யும் பணியை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தொடர்ந்து மேற்கொண்டுள்ளது// என்பது அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகும் செய்தியாகும்*

எங்கெல்லாம் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் உள்ளனவோ அங்கெல்லாம் அவர்களை அனுப்பிப் பரிசோதனை செய்வது, எதிர்காலத்தில் மனிதர்களை அங்குக் குடியேற்றம் செய்வது ஆகியவை குறித்தத் திட்டமும் நாசாவின் பரிசீலனையில் உள்ளதாம்.

பூமியில் உணவு, உறைவிடம், போன்றவற்றிற்கான பற்றாக்குறை நிலவுவதாலும், சுற்றுச்சூழல் பெருமளைவில் மாசடைவதாலும், ஒரு காலக்கட்டத்தில் இங்கு மனிதர்கள் வாழ இயலாத இயற்கைச் சூழல் உருவாகும் என்பதாலும் ஏற்புடைய கோளிலோ கோள்களிலோ மனிதர்கள் குடியேறுவது பற்றி ஆராய்கிறார்கள்.

குடியேறினால் மத வெறி, இன வெறி, ஆதிக்க வெறி, வஞ்சகம், சூதுவாது போன்ற அத்தனைக் கெட்டக் குணங்களும் மனிதர்களிடமிருந்து காணாமல் போக்கக்கூடிய ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டால், அது பெரிதும் வரவேற்கத்தக்கதாகும்.

அது சாத்தியப்படாது என்றால்.....

தெரிந்த அத்தனைத் தில்லுமுல்லுகளையும் அயோக்கியத்தனங்களையும் செய்துகொண்டிருக்கிற மனிதர்கள், இந்தப் பூமி வாழ்வதற்குத் தகுதியற்றதாக ஆகும்போது, கூண்டோடு கைலாசமோ வைகுண்டமோ சொர்க்கமோ நரகமோ, வேறு எங்குமோ போய்த் தொலையட்டுமே[நாம் உயிரோடு இருக்கப்போவதில்லை. ஹி... ஹி... ஹி!!!].

எப்போதோ பூமி வாழத்தகுதியற்றதாக ஆகுமாம்; மனித இனம் அழியுமாம். அதை வாழவைக்க ஆராய்ச்சி செய்கிறார்களாம் ஆராய்ச்சி! வெங்காயம்!!

* * * * *

https://www.kuriyeedu.com/?p=79515