உலகின் 2ஆவது பெரிய மதம் இஸ்லாம்.
இதன் வளர்ச்சிக்குக் காரணமாக, 'ஓரே கடவுள் கொள்கை', ஏற்றத்தாழ்வுகளுக்கு இடம்தராத 'கூட்டு வழிபாடு', தனி மனிதரின் சாதனைகளைக்கூட அல்லாவின் கருணையால் ஆனது["எல்லாப் புகழும் இறைவனுக்கே"] என்று நம்புவது, மத நம்பிக்கைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பது போன்றவற்றைச் சொல்லலாம்.
மற்ற சில முன்னணி மதங்களோடு ஒப்பிட்டால், இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகள் குறைவு என்பதையும் ஒரு காரணமாகக் கொள்ளலாம்.
இஸ்லாம் மதம் சார்ந்த ஆட்சியாளர்களால் பெருமளவிலான மக்கள் இம்மதத்தைத் தழுவினார்கள் என்று சொல்லப்பட்டாலும், பிற மதத்தவரின் ஆட்சியின் கீழ் வாழ நேரிட்டபோதும் அவர்கள் மீண்டும் தத்தம் தாய் மதத்திற்குத் திரும்பவில்லை என்பதும், பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் கணிசமான அளவில் இஸ்லாமைத் தழுவுவது நிகழ்ந்துகொண்டிருக்க, இதிலிருந்து பிற மதங்களுக்கு மாறுவோர் மிக மிக மிகக் குறைவு என்பதும் கருத்தில் கொள்ளத்தக்கது.
ஆக, கட்டுப்பாட்டுக்கு முன்னுதாரணமாக விளங்குவது இஸ்லாம் மதம் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை.
இந்நிலையில், அண்மைக் காலங்களில் தங்களின் மீதான அதிக அளவிலான கட்டுப்பாடுகளை இஸ்லாம் பெண்கள் எதிர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்பது அறியத்தக்கது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
அதீத அறிவியல் வளர்ச்சி, உலக அளவில் கல்வி கற்போர் எண்ணிக்கை அதிகரிப்பு, சீர்திருத்தவாதிகள் செய்யும் தொடர் பரப்புரை போன்ற காரணங்களால் மக்களிடையே, 'எதற்கு? ஏன்? எப்படி?' என்றெல்லாம் கேள்விகள் எழுப்பி விளக்கம் கேட்கும் பகுத்தறிவுச் சிந்தனை வளர்ந்து வருகிறது.
இதற்கு இஸ்லாம் பெண்களும் விதிவிலக்கு அல்லர்.
இதன் விளைவாக, எப்போதுமே கவர்ச்சிகரமான உடைகளில் ஈடுபாடு காட்டாத அவர்கள், காலங்காலமாகத் தங்களின் மீது திணிக்கப்பட்டுவரும் கட்டுப்பாடுகளில் மிகச் சிலவேனும் நீக்கப்படுதல் வேண்டும் என்று விரும்புகிறார்கள்; போராடத் தொடங்கியிருக்கிறார்கள்.
ஆண்கள் பலரின் ஆதரவு அவர்களுக்கு இருந்தபோதிலும், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளின் ஆட்சியாளர்கள் போராடும் பெண்களுக்கு விதிக்கும் கொடூரத் தண்டனைகள் போராட்டத்தைத் தீவிரம் அடையச் செய்திருக்கின்றன.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களில் இன்றளவும் 80க்கும் மேற்பட்ட பெண்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்['மனித உரிமைகள் குழு ஒன்றின் ஆய்வறிக்கையின்படி, கிட்டத்தட்ட இரண்டு வார ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 83 பேர் கொல்லப்பட்டுள்ளனர்] என்பது செய்தி.
[இந்தப் பெண்கள் ஆபாச உடையில் இல்லைதானே?]
இந்தத் தகவலை ஈரானியப் பத்திரிகையாளரும் ஆர்வலருமான 'மசிஹ் அலினெஜாட்' என்பவர், தனது ட்விட்டரில் '21ஆம் நூற்றாண்டில் ஈரானில் ஒரு பெண்ணாக இருப்பதால் நிகழும் கொடூரமான கதை இது' என்கிறார்.
எது எப்படியோ, இஸ்லாம் இனியும் வளருமா, வீழ்ச்சியைச் சந்திக்குமா என்பது ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் ஆட்சியாளர் கைகளில் உள்ளது எனலாம்.