திங்கள், 3 அக்டோபர், 2022

'சன்னி' & 'ஷியா' முஸ்லீம்களின் மோதலும் பற்றி எரியும் ஈரானும்!!!


ஈரானில் போலீஸ் கமாண்டர் ஒருவர்[ஷியா முஸ்லீம்] 15 வயது பலூச் சிறுமியை['சன்னி' முஸ்லீம்] போலீஸ் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததை அடுத்து ஈரானில் மற்றொரு போராட்டம் வெடித்தது. போராட்டக்காரர்களால் அரசு அலுவலகங்கள் தீவைக்கப்பட்டதில் 36 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர ஈரானில் 22 வயதான 'மஹ்சா அமினி' போலீஸ் காவலில் இறந்ததால் வெடித்த போராட்டம் முடிவடையாத நிலையில், அதே ஈரானில் 15 வயதே ஆன இளம் பெண்ணுக்கு நேர்ந்த வன்புணர்வுக் கொடூரம் மக்களைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாக அமைந்துள்ளது.

ஈரானில் போலீஸ் கமாண்டர் ஒருவர்['ஷியா' முஸ்லீம்] 15 வயது பலூச் சிறுமியை['சன்னி' முஸ்லீம்] போலீஸ் நிலையத்தில் பாலியல் பலாத்காரம் செய்ததை அடுத்து ஈரானில் மற்றொரு போராட்டம் வெடித்தது.

 

ஈரானின் சன்னி ஆதிக்க நகரமான ஜஹெடானின் தென்கிழக்கில் பெரிய மசூதியில் போராட்டக்காரர்கள் திரண்டபோது, ​​போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அரசு அலுவலகங்களுக்குத் தீயிடுதல் போன்ற வன்முறைச் செயல்களில் 'சன்னி' மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

 

பலுசிஸ்தான் மாகாண கவர்னர் ஹொசைன் மொடரேஸ் கியாபானி  இதை உறுதிப்படுத்தியுள்ளார் என்பது செய்தி.

 

பெண்கள் மீதான அடுத்தடுத்தத் தாக்குதல்களும் வன்புணர்வு நிகழ்வுகளும், அவற்றை எதிர்த்துச் 'சன்னி' பிரிவு மக்கள் நடத்தும் போராட்டமும் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்துமா, அல்லது, ஆட்சியாளர்களால் போராட்டம் நசுக்கப்படுமா என்பது இனி வரும் நாட்களில் அறியப்படலாம்.

Iran protests: Shia commander rapes Sunni girl, mob sets government offices on fire

https://www.msn.com/en-in/news/world/iran-protests-shia-commander-rapes-sunni-girl-mob-sets-government-offices-on-fire/ar-AA12uNVl?ocid=msedgdhp&pc=U531&cvid=4d81ab047a044cbaa93518afad08f167 -02.10.2022