எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

வியாழன், 10 அக்டோபர், 2024

அஞ்சாமல் மரணத்தை எதிர்கொண்ட ரத்தன் டாட்டாவின் நெஞ்சுரம்!!!

86 வயதான தொழிலதிபர் ரத்தன் டாடா[Ratan Tata]தனது வயது மற்றும் தொடர்புடைய மருத்துவ நிலைமைகளின் காரணமாக, வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகத் திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மோசமான உடல்நிலை காரணமாக அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. 

இது குறித்துத் தன் இன்ஸ்டாகிராம் & டிவிட்டர் தளங்களில், தான் நல்ல மனநிலையில் இருப்பதாகவும், மக்களும் நலம் விரும்பிகளும் கவலைப்பட எந்தக் காரணமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஒரு நாள் கழித்து நிகழவுள்ள தன் மரணம் குறித்து அவர் அறியாமலிருக்க வாய்ப்பே இல்லை. அறிந்திருந்தும் எதிர்கொள்ளவுள்ள அதை அலட்சியப்படுத்தி, தன் மீது அன்புகொண்டோரை ஆற்றுப்படுத்துவதற்காக அறிக்கை வெளியிடுகிறார் என்றால், அவரின் நெஞ்சுரம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.

உலகளவில், அவரின் அருங்குணங்களையும், செய்த அரிய சாதனைகளையும் பட்டியலிட்டுப் பிரபலங்கள் பாராட்டுகிற அதே வேளையில், ரத்தன் டாட்டா அவர்களின் மனோதிடத்தைப் பாராட்டி அன்னாருக்கு அஞ்சலி செலுத்துவதில் நாம் ஆறுதல் பெறுகிறோம்.
              *   *   *   *   *