வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

அமேசானில் 'மின் நூல்' பதிப்பித்தல்...தொடர்ச்சி...


நேற்றைய[31.02.2018] பதிவின்  https://kadavulinkadavul.blogspot.com/2019/01/blog-post_31.html தொடர்ச்சி.....

படிநிலை ஐந்து:

Kindle Create ஐகானைக் கிளிக் செய்து, New Project From File என்பதையும் கிளிக் செய்து மொழிப்[language] பட்டியலில் 'தமிழ்' மொழியைத் தேர்வு செய்த பின்னர், Choose File ஐயும் கிளிக்கி, File Explore இல் ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ள docx ஐத் தேர்வு செய்தால் அது kindle create க்கு பதிவேற்றம்[uploaded] ஆகிவிடும்.

kindle create சற்று நேரம் இயங்கி, பதிவேற்றம் செய்யப்பட்ட docx கோப்பைக் காட்சிப்படுத்தும்; மின்னூலின் தலைப்பு, துணைத்தலைப்பு, ஆசிரியர் பெயர், இயல் தலைப்புகள், பத்தியின் முதல் எழுத்து ஆகியவற்றின் வரிவடிவத்தை மாற்றி அமைப்பதற்கான வசதியையும் அது கொண்டிருக்கும். 

உரிய முறையில் அவற்றைப் பயன்படுத்தி ஆவணத்தைச் சிறப்புற வடிவமைத்த பின்னர், கிண்டிலில் வெளியிடவிருக்கும் ஆவணத்தின் 'மாதிரி' அல்லது முன்னோட்டத்தை[sample]ப் பார்வையிடலாம். பிழைகள் இருப்பின் சரிசெய்து சேமித்து[save]விடலாம். இரண்டு கட்டங்களாகச் சேமித்தல் நிகழும்.

சேமிக்கப்பட்ட ஆவணம், file explorer இல், docx கோப்புக்கு அருகிலேயே Kindle Create என்னும் பெயருடன் இடம்பெற்றுவிடும்{கிண்டில் மின் நூலை உருவாக்ககுவதற்கு இதைத்தான் பின்னர் பதிவேற்றம்[upload] செய்தல் வேண்டும்}

படிநிலை ஆறு:

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு, Amazon.in க்குள் நுழைதல் வேண்டும். நுழைந்து, pentopublish என்று தேடுபொறியில் தட்டச்சு செய்தால் அமேசானின் முகப்புப் பக்கம் காட்சியளிக்கும்.

pentopublish இன் கீழ் உள்ள பட்டியலில், Kindle Direct Publishing ஐ கிளிக் செய்து, ஏற்கனவே பதிவு செய்துள்ள மின்னஞ்சலில் உள்நுழைந்தால், கீழ்க்காணும் அறிவிப்பைக் காணலாம்.

New to Kindle Direct Publishing? Want a simple, step-by-step guide to publishing on Amazon? We’ve created KDP Jumpstart for authors like you. KDP Jumpstart is a streamlined, sequential approach to the steps required to go from finished manuscript to published book. To publish on KDP, you’ll complete four major milestones:
Getting started.  Enter your author, payment, and tax information to set up your KDP account.
Book details. Enter information like title, author, and description to help readers find your book.
Manuscript & cover. Transform your manuscript into a formatted file and design a cover that grabs readers’ attention.
Rights & pricing. Decide where and for how much you want to sell your book.

முதலில், நமக்குரிய KDP கணக்கில் நுழைந்து தேவையான விவரங்களைப் பதிவு செய்தல் மிகவும் முக்கியம். வங்கிக் கணக்கில் பதிவான பெயரையே இங்கும் பதிவு செய்தல் வேண்டும். புனை பெயர் சேர்த்தல் கூடாது. விரும்பினால் மின் புத்தகத்தில்  அதைச் சேர்க்க்கலாம்.

படிநிலை ஏழு:

அடுத்து, முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ள, become an author ஐக் கிளிக் செய்தால்[தேவப்பட்டால் மீண்டும் நம் கணக்கில் நுழைதல் வேண்டும்] கீழ்க்காணும் குறிப்புகள் தென்படும்.

Bookshelf | Reports | Community | KDP Select

Bookshelf ஐக் கிளிக்கினால்.....

+kindle book என்பது ஒரு சதுரக் கட்டத்திலும், kindle paperback மற்றொரு கட்டத்திலும் தோன்றும்.

kindle book ஐத் தேர்வு செய்தால் நாம் புத்தகம் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கான பதிவிடங்கள், Kindle eBook Details, Kindle eBook Content, Kindle eBook Pricing என் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

படிநிலை எட்டு:

book details பிரிவில், புனை பெயரை மட்டும் குறிப்பிட விரும்பினால், author > last name க்குரிய கட்டத்தில் அதைப் பதிவு செய்தல் வேண்டும்.

key words கட்டத்தில், pentopublish என்று பதிவு செய்தல் மிகவும் அவசியம். விரும்பும் பிற சொற்களையும் பதியலாம்.

செய்து முடித்து, save and contue ஐக் கிளிக் செய்தல் வேண்டும்.

eBook Content இல் manuscript ஐத் தேர்வு செய்து, file explorerஇல் சேமிக்கப்பட்டுள்ள kindle create ஐப் பதிவேற்றம்[upload] செய்யும்போது மிகுந்த கவனம் தேவை. தவறுதலாக docx ஐத் தேர்வு செய்ய நேரிடலாம் என்பதை மறத்தல் கூடாது.

kindle create ஐ பதிவேற்றம் செய்வதற்கு முன்பு, அதை டபுள் கிளிக் செய்தால், கிண்டிலில் இடம்பெறவிருக்கும் நூலின் முழு வடிவத்தையும்[முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம்வரை]  வாசிக்க முடியும்.

அடுத்த நிகழ்வு, மின் நூலுக்கான அட்டை தயாரித்தல். தானே வடிவமைத்த பல வண்ணப் படங்களை கிண்டில் காட்சிப்படுத்தும். நாம் விரும்பியவாறு அட்டையின் நிறத்தையும் எழுத்துருவையும் மாற்றி அமைக்கலாம்[நாமே சுயமாகத் தயாரித்த படங்களையும் பதிவேற்றலாம். தயாரிப்பில் பயிற்சி பெற்றவர்களின்[ஓவியர்கள்] உதவி தேவை. 

அட்டைப்படத் தயாரிப்பு முடிந்ததும், கிண்டிலில் வெளியாகவிருக்கும் நம் மின் நூலின் மாதிரிப் பிரதியை வாசிக்கும் வாய்ப்பும் உள்ளது. அதற்கு ''முன்னோட்டம்''[Launch Preview] பட்டையைக் ஐக் கிளிக் செய்தல் தேவை.

இதைச் செய்து முடித்து மீண்டும் save and continue செய்து அடுத்த படிக்கு நகரலாம்.

படிநிலை ஒன்பது:   

Kindle eBook Pricing: நூலைப் பதிப்பிக்கும் எழுத்தாளர் பிரபலம் ஆகாதவராகவும், நூலின் பக்க எண்ணிக்கை குறைவாகவும் இருந்தால் குறைந்தபட்ச விலையை நிர்ணயிப்பது நல்லது. விற்பனை ஓகோ என்று உயருமாயின்,  விலையைக் அதிகரிக்கும் வசதி உள்ளது. விலையைக் குறைப்பதும் நடைமுறையில் உள்ளது.

நம் நூலுக்கென்று ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டாலும், நாம் சம்மதித்தால்[optional] kindle reader வாங்குவோருக்கு அதை இலவசமாக வாசிக்க அமேசான் அனுமதிக்கும்.

அமேசானிடம் வாடகை மின் நூல் நூலகமும்[lending ebook library] உள்ளது. அதில் நம் நூலைச் சேர்க்க அனுமதித்து, அது வாசகரால் வாசிக்கப்பட்டால், வாசிப்போரின் எண்ணிக்கைக்கு ஏற்ப நூலக வருவாயிலிருந்து நமக்கான பங்குத் தொகையை அமேசான் வழங்கும்.

படிநிலை பத்து: 

நாம் பதிப்பித்து வெளியிட்ட மின் நூல் நம் மனதுக்கு நிறைவு தரவில்லையெனின், அதை மீண்டும் மீண்டும் புதுப்பித்தலுக்கான[update செய்தல்] வாய்ப்பும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

மின் நூலுக்காகத் தயார் செய்த ஆவணத்தைத்[Word Document] திருத்தியமைப்பதோடு, DOCX ஆக மாற்றி, Kindle Create மூலம் வடிமைத்தல் வேண்டும். இந்தச் சிரமத்தைத் தவிர்த்திட வேண்டுமாயின், 'செய்வன திருந்தச் செய்' என்னும் முதியோர் வாக்கை மறவாமலிருத்தல் நல்லது.

படிநிலை பதினொன்று:

கிண்டிலில் நாம் வெளியிட்ட மின் நூல், ஓரிரு நாட்களில்[அதிகபட்சம் 72 நாட்கள் ஆகும் என்கிறது அமேசான்] கிண்டில் விற்பனையகத்தில்[kindlw store] இடம்பெற்றுவிடும்.

அமேசான் முகப்புப் பக்கத்தில் 'தேடல்'[search] பகுதியில் நம் பெயரைப் பதிவு செய்தால் அட்டைப் படத்துடனான நம் மின் நூல் பற்றிய குறிப்புகளைக் காணலாம். 

பின்னர், அமேசானின் தமிழ் நூல்கள் பட்டியலிலும்[சிறுகதை, நாவல், கட்டுரைகள், கவிதைகள், சிறுவர் நூல்கள் என்று வகைப்படுத்தப்பட்டவை] அது இடம்பெற்றுவிடும்.

நாம் பதிவு செய்த குறிப்புச் சொற்கள்[key words], நூலை எளிதில் கண்டறிவதற்கு உதவிகரமாக அமையும்.

நம் நூலை வாங்குவோரின் எண்ணிக்கை உயர்வதற்கேற்ப அதிகம் விற்பனையாகும் நூல்கள்[Best Sellers] பிரிவில் நம் நூல் இடம்பெறுதல்கூடும்.

நூல்களின் விற்பனையில் நமக்குரிய பங்கை[Royalty] குறிப்பிட்ட கால அவகாசத்தில் அமேசான் நம் வங்கிக் கணக்கில் சேர்த்துவிடும் என்பதும் அறியத்தக்கது.

அமேசான் நிறுவனத்தைப் பொருத்தவரை, நம்பகத்தன்மையுடன் செயல்படுவதால், அதில் மின் நூல் வெளியிடும் தமிழ் எழுத்தாளர்கள்/பதிப்பாளர்கள் எண்ணிக்கை இன்றளவில் கணிசமாக அதிகரித்து வருகிறது. கல்கி, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சாண்டில்யன், இரா.முருகன், எஸ்.ராமகிருஷ்ணன். ஜெயமோகன் போன்ற மிகப் பிரபலமான எழுத்தாளர்களின் நூல்கள் அமேசானில் இடம்பெற்றிருப்பதும் கவனிக்கத்தக்கது.

பிரபலம் ஆகாதவர்களும் பதிப்பகங்களால் கவனிக்கப்படாதவர்களுமான எழுத்தாளர்களுக்கு ஏற்ற புகலிடமாக அமேசான் உள்ளது என்பதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை.

எழுத்தாளர்களுக்கு என் வாழ்த்துகள். நன்றி.
-----------------------------------------------------------------------------------------------------------------
அமேசான் கிண்டிலில் வெளியான என்னுடைய 13 ஆவது நூல்.....
================================================================