எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 1 ஜனவரி, 2026

பொல்லாத புத்தாண்டு வருத்தங்கள்![தத்துவப் பகிர்வு!! ஹி... ஹி... ஹி!!!]

‘நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்                                                                   வாளது உணர்வார்ப் பெறின்’  

//நாள் என்பது ஓர் ‘அளவுகோல்’தான் எனினும், அது[வாழும் ஆயுட்கால அளவைக் குறைப்பதால்] நம் உயிரைப் பறிக்கும் வாள் ஆகும்// என்பது மேற்கண்ட திருக்குறளுக்கான சுருக்கமான விளக்கம்.

ஆகவே, ஒரு நாள் என்பது நம்மால் வெறுக்கத்தக்கது ஆகும்.

ஆண்டின் தொடக்கம்[புத்தாண்டு] என்பதும் இதைப் போன்றதுதான். அதாவது, இது நம் வாழ்நாளில் ஓர் ஆண்டைக் குறைக்கிறது; பறிக்கிறது என்றும் சொல்லலாம்.

உண்மை இதுவாக இருக்க, ‘புத்தாண்டு வாழ்த்து’த் தெரிவிப்பதை மக்கள் வழக்கமாக்கியுள்ளார்களே, இது ‘அறிவுடைமை’ ஆகுமா?