எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 31 டிசம்பர், 2025

சிவபெருமானை வம்புக்கு இழுக்கும் சங்கி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான்!!!

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருக்குக் கோயில் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர்.....

//இந்துக்கள் புனிதமாகக் கருதக்கூடிய திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கு ஏற்றுவதைத் தடுக்கக்கூடியவர்கள் முட்டாள்கள். சிவபெருமான் அவர்களுக்குப் பாடம் புகட்டுவார்] என்று தெரிவித்துள்ளார்]//*

ஓ..... தர்மேந்திரப் பிரதான் என்னும் தர்மவானே,

இந்நாள்வரை சிவபெருமான்[+அல்லாவோ கர்த்தரோ பிற கடவுள்களோ] என்றொரு கடவுள் இருப்பதை அறிவியல்பூர்வமாகக் கண்டறிந்து சொன்னவர் எவருமில்லை.

சிவபெருமானோ, அவருக்கும் மேலான கீழான கடவுளர்களோ இருந்தாலும், துன்புறுத்தும் கொடூரங்களுக்கும் கொலைபாதகங்களுக்கும் உள்ளாகும் உயிரினங்களின்[மனிதர்கள் உட்பட] வாழ்க்கையில் அவரோ அவர்களோ தலையிடுவதாக அறியப்படவில்லை.

கடவுள் அல்லது கடவுள்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு, மனிதர்களைச் சிந்திக்கவிடாமல் தடுத்து, மதங்களின் பெயரால் அவர்களிடையே கலவரங்களை உண்டுபண்ணும் கயமைத்தனங்களில் ஈடுபடுபவர்கள் உங்களின் சங்கிக் கூட்டத்தார்தான்.

நீங்கள் போற்றும் சிவபெருமான் என்றொரு கடவுள் இருந்தால், அவர் முதலில் உங்களுக்குத்தான் பாடம் புகட்டுவார்.

இனியேனும் எதார்த்தமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் பிரதானே!

* * * * *

*https://news7tamil.live/no-one-can-stop-the-lighting-of-lamps-on-the-thiruparankundram-hill-says-dharmendra-pradhan-in-an-interview.html?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjCwq6ALML21uAMwntLuBA&utm_content=rundown