எனது படம்
ஆண்களோ பெண்களோ அவர்களைக் கட்டுப்படுத்தி ஒழுக்க நெறி பிறழாமல் வாழச் செய்வது ஓரளவுக்கே சாத்தியம். வாழ்தல் குறித்த அனுபவ அறிவும், மனதைப் பக்குவப்படுத்துவதற்கான தீவிர முயற்சியும், பிரச்சினை எதுவாயினும் அது குறித்துச் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும் அதற்கான இன்றியமையாத் தேவைகள் ஆகும்.

புதன், 31 டிசம்பர், 2025

“தமிழ் மீது உலகமே அன்பு செலுத்துகிறது”... மோடியின் வஞ்சகப் புகழ்ச்சி!!!

தமிழ் மொழி மீது உலகம் முழுவதும் உள்ளவர்கள் அன்பு செலுத்துகிறார்கள் என்று ‘புகழ் மாரி’ பொழிவது இந்தப் பொய்மை விளம்பி[மோடி]க்கு வழக்கமாகிப்போனது.

உலகம் விரும்பும் தமிழை இவர் மட்டும் விரும்பவில்லை என்னும் உண்மை கீழ்க்காணும் ஐ.நா.வின் அறிக்கை[புத்தாண்டு வாழ்த்து> நகல் பதிவு] அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்தப் போலித் தமிழ்ப் பற்றாளன் விரும்பியிருந்தால்.....

இந்திய மொழியான இந்தியுடன், ஐ.நா.மன்றம் தமிழிலும் வாழ்த்துத் தெரிவித்திருக்கும்[இந்தியாவில் வழக்கில் உள்ள மொழிகளில் தமிழும் ஒன்று என்பதை இந்த மோசடியாளனின் அரசு ஐ.நா.சபைக்குத் தெரியப்படுத்தவே இல்லை].

வாயளவில் தமிழைப் புகழ்ந்து புகழ்ந்து பேசி, வரும் தேர்தலில் தமிழர்களின் வாக்குகளை அள்ளி, அவர்களை அடிமைகளாக்கத் திட்டமிடும் ஓர் இந்திய அரசியல்வாதி இந்த நாட்டில் பிறந்ததில்லை.

இமாலயப் பொய்யன்!