குறைவான தூக்கம் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதும், இதய நோய்கள், மனச்சோர்வு, குறைவான நோயெதிர்ப்புச் சக்தி போன்றவற்றுக்கான அபாயத்தை அதிகரிக்கும் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை. அதிக நேரம் தூங்குவதற்கும் இதுவே பொருந்தும்.
ஆய்வுகள் மற்றும் உலகளாவிய தூக்கத் தரவுகளின்படி, இரவில் தொடர்ந்து ஒன்பது மணி நேரத்திற்கு மேல் தூங்குவது நல்லதல்ல.
குறைந்த நேரம் தூங்குவதைவிடவும் இது ஆபத்தானது. நீரிழிவு நோய்க்கும், சில தீராத நோய்களுக்கும் இது காரணமாக அமையக்கூடும்.
அதிக நேரம் தூங்குவது தீவிரமான மன நலப் பாதிப்புகளையும் உண்டுபண்ணும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
எனவே, தூக்க விசயத்தில் அலட்சியம் கூடாது; கூடவே கூடாது.
* * * * *
