வெள்ளி, 2 ஜனவரி, 2026

தில்லி முதலாளி[நெ.2] வருகையும்[4.1.2026] த.நா.அடிமைகளுக்கான கடைசி வாய்ப்பும்!

04.01.2026இல் தில்லி முதலாளி[நம்பர்: 2] தமிழ்நாட்டுக்கு வருகை தருவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது[மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனவரி 4ஆம் தேதி புதுக்கோட்டை வருகை தருகிறார். தொடர்ந்து, ஜனவரி 5ஆம் தேதி ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்யும் அவர், திருச்சியில் பொங்கல் விழாவிலும் பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது. அதே போல், 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ பிரச்சாரப் பயணத்தின் நிறைவு விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிறைவு விழாவில் அமித்ஷா பங்கேற்க இருக்கிறார்[https://tamil.getlokalapp.com/tamilnadu-news/amit-shah-to-visit-tamil-nadu-on-jan-4-16032680].

‘முதலாளி 2’ வருகை புரிவதன் முக்கிய நோக்கம், “எதிர்பார்க்கும் ‘வெகுமதி’ கிடைக்குமா? எவ்வளவு கிடைத்தால் அடிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம்?” என்று யோசித்து யோசித்து ஊசலாட்டத்திலிருக்கும் இங்குள்ள அடிமைகளின் தில்லிப் பயணத்தை[தனித்தனியாக]த் தவிர்த்து, இங்கேயே அவர்களை ஒருங்கிணைத்து அரவணைப்பதுதான்.

நிரந்தர அடிமையாக இருக்கும் அந்த ஆண்ட கட்சி மட்டுமல்லாமல், அம்மணிகளின் கட்சிகள், வெற்றிக் கனி பறிக்கும் கட்சிகள்,  தொடை தட்டும் தன்மானத் தமிழர் கட்சிகள், தொண்டர்களே இல்லாத ஒற்றை நபர்க் கண்ணீர்க் கட்சிகள் எல்லாம் அடிமைச் சாசனத்தில் கையெழுத்திடுவதற்கான கடைசி வாய்ப்பாக, 04.01.2026 & 05.01.2026[‘முதலாளி ‘நம்பர் 1’ பெயரில்[மோடி] மோசடிப் பொங்கல் வைக்கப்படவுள்ளது] தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

சாசனத்தில் கையெழுத்திடும்போதே, அவைகள் எதிர்பார்ப்பதைவிடவும் அதிக ‘வெகுமதி[2026 தேர்தல் பண்டிகையை முன்னிட்டு] வழங்கவிருப்பதும் தெரியவந்துள்ளது.

“முந்துக! ஆசை தீர அள்ளுக வெகுமதி” என்று அடிமைகளை விரும்பி வேண்டிக்கொள்கிறோம்!