தன்னைப் பற்றியும், பிறரைப் பற்றியும், பிற உயிரினங்கள் பற்றியும், அண்டவெளியில் இடம்பெற்றுள்ளவை பற்றியும், ஆசை, பாசம், பற்று, குணங்கள், பண்புகள் என்று தான் அறிந்த பிறவற்றைப் பற்றியும் ஆராய்ந்து அறிவதற்கான அறிவைப் பெற்றிருக்கிறான் மனிதன்.
சிந்தித்ததன் விளைவாக, இவை தொடர்பாக விளையும் நன்மை தீமைகளையும் நன்கு அறிந்திருக்கிறான்.
ஆயுட்காலம் மிகக் குறைவு என்பதையும், அதை நோய்நொடிகளின்றி முழுமையாக வாழ்ந்துமுடிப்பது சாத்தியம் அல்ல என்பதையும், மரணத்திற்குப் பிறகான தன் நிலை புரியாத புதிர் என்பதையும் புரிந்துகொண்டிருக்கிறான்.
இந்த அறிதல் & புரிதல்களின் மூலம் கெட்ட எண்ணங்களை விலக்கியும், நல்ல எண்ணங்களை வளர்த்தும் வாழ்ந்துமுடிப்பது அவனளவில் சாத்தியமே.
ஆனால்.....
தவறு மேல் தவறுகள் செய்தும், அடுத்தடுத்துக் குற்றங்கள் இழைத்தும் வாழ்நாளை வீணடிக்கிறானே, அது ஏன்?
பிறர் போற்றும் வகையில் வாழ்ந்த ஞானிகள் & மேதைகள் & அறிவுஜீவிகளில் பலரையும் வீழ்த்தியது இந்த அதீத ஆற்றல் வாய்ந்த உணர்ச்சிதான்.
அறிவைக் காட்டிலும் வலிமை வாய்ந்ததாக உணர்ச்சி இருப்பது ஏன்?
அது இயற்கை என்றால், அந்த இயற்கையைப் புரிந்துகொள்வது அத்தனை எளிதல்ல.
கடவுளின் படைப்பு என்றால் அவன் மிக மிக மிகக் கொடியவன்!
* * * * *
அனைவருக்குமான அடியேனின் பரிந்துரை.....
“அறிவை வளர்ப்பது மிக மிக அவசியமே என்றாலும், அதைக் காட்டிலும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் அதிகக் கவனம் செலுத்துங்கள்.” -ஹி... ஹி... ஹி!!!
