நான் 'மின் நூல்'களை மிகக் குறைந்த அளவிலேயே வாசித்திருக்கிறேன். எனினும், அந்த வாசிப்பு 'நாமும் மின் நூல் வெளியிட வேண்டும்' என்னும் ஆர்வத்தைத் தோற்றுவித்தது[இரு சிறுகதைத் தொகுப்புகள், 'பசி.ப.பரமசிவம்'[தன்வரலாறு], ஓர் ஆய்வு நூல் என என்னுடைய நான்கு நூல்கள் மட்டுமே அச்சு வடிவம் பெற்றுள்ளன].
கடவுளின் இருப்பு, மூடநம்பிக்கைகள், தமிழ் மொழி, பெண்ணுரிமை போன்றவற்றைக் கருப்பொருளாகக் கொண்ட 800க்கும் மேற்பட்ட கட்டுரைகளைக் 'கடவுளின் கடவுள்'[https://kadavulinkadavul.blogspot.com] என்னும் என் வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நான், அவற்றுள் கணிசமானவற்றை மின் நூல்களாக உருவாக்க எண்ணினேன்.
அதற்கான சூழலை எதிர்பார்த்துக் காத்திருந்தபோது, நாவல், சிறுகதை, கவிதை, சிறுவர் நூல்கள் ஆகியவற்றிற்கான போட்டி[pentopublish2018] ஒன்றை அமேசான் அறிவித்திருப்பதை 'இந்து தமிழ்' நாளிதழ் வாயிலாக அறிய நேர்ந்தது.
எழுத்தாளர்கள், தம் படைப்புகளை[நூலாக வெளிவராதவை] அமேசான் கிண்டிலில், குறிப்பிட்ட கால வரம்புக்குள்[10.11.2018 - 09.02.2019] மின் நூலாக வெளியிடுதல் வேண்டும் என்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்று.
கிண்டிலுக்கு ஏற்ற வகையில் நூலை வடிவமைத்து வெளியிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும்[ஆங்கிலத்தில்] அது வகுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அவற்றை மிகக் கவனமாகப் படித்து நூல் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்.
தொடக்கத்தில் தவறுகள் பல நேர்ந்தாலும் மனம் தளராமல் 12 நூல்களை வடிவமைத்துக் கிண்டிலில் இணைத்தேன். எத்தனை முறை வேண்டுமானாலும் புதுப்பிக்கும் வாய்ப்பை அது வழங்கியிருந்ததால், இணைத்த நூல்களில் நேர்ந்த பிழைகளைத் திருத்தி மீண்டும் இணைத்தேன்.
இதற்கிடையே.....
25 லட்சத்திற்கும் மேலான ஆங்கில மின் நூல்கள் கிண்டிலில் இடம்பெற்றிருக்க, ஏறத்தாழ 8000 தமிழ் நூல்கள் மட்டுமே வெளியாகியிருப்பத்தை அறிந்து மனம் வருந்தினேன்.
தமிழார்வமுள்ள எழுத்தாளர்கள் முயன்றால் இந்த எண்ணிக்கையை மேலும் பல மடங்காக அதிகரிக்க இயலும். என்னுடைய இந்த அனுபவம், இவ்வகை முயற்சியை மேற்கொள்வோருக்குக் கொஞ்சமேனும் உதவும் என்று எண்ணினேன். அந்த எண்ணத்தின் விளைவே, 'அமேசானில் மின் நூல் பதிப்பித்தல்...ஓர் அனுபவப் பகிர்வு' என்னும் இந்த நீள் பதிவு.
தமிழில் மின் நூல்
கடந்த சில ஆண்டுகளில், மின் நூல் வாசிக்கும் பழக்கம் தமிழர்களிடையே அதிகரித்திருக்கிறது. மின் நூல் பதிப்பிக்கும் ஆர்வமும் சற்றே வளர்ந்திருக்கிறது.
பதிப்பிக்கும் கலையில் தேர்ச்சி பெற்ற சிலர் குழுவாக இணைந்து, freetamilbooks.com என்னும் தளத்தை உருவாக்கி, எழுத்தாளர்களின் படைப்புகளைப் பெற்று, மின்னூலாக்கிப் பதிப்பித்து வெளியிடும் பணியைச் செய்துவருகிறார்கள். நூல்களைப் பெருமளவில் விற்பனை செய்வது அரிய செயல் என்பதால், நூலாசிரியர்களுக்கு ராயல்ட்டி எனப்படும் 'பங்குத் தொகை'யை இவர்கள் வழங்குவதில்லை.
அதனால்தானோ என்னவோ, ஆர்வம் இருந்தும் மின் நூல் பதிப்பிக்கும் முயற்சியில் அதிக எழுத்தாளர்கள் ஈடுபடவில்லை. வெளியாகும் கணிசமான நூல்களும் ஆங்கில மின் நூல்களைப் போல் பிரபலம் ஆவதில்லை; பெரும் எண்ணிக்கையிலான வாசகரைச் சென்றடைவதும் இல்லை.
இந்நிலையில், லாப நோக்கற்ற சில தன்னார்வ அமைப்புகள், மின் நூல்களை வெளியிட்டு அவற்றை வாசிப்பதற்கு இலவசமாக வழங்குகின்றன.
அவற்றில், கீழ்க்காண்பவை குறிப்பிடத்தக்கவை.
நூலகம்: http://www.noolaham.org/
திண்ணை: http://www.thinnai.com/?module=displaysectionall§ion_id=11&format=html [வார இதழ்]
http://tamilpadhivu.blogspot.com/ [இலவசமாக மின் நூல் தயாரித்தளித்தல்]
http://tamilbookmarket.com/ [விற்பனை]
https://amazon.in [நூல் விற்பனை]
அமேசானின் தமிழ்ப்பணி
ஆங்கிலத்தில் மிகப் பெரும் எண்ணிக்கையில் மின் நூல்களை வெளியிட்டு விற்பனை செய்துவரும் அமேசான் வணிக நிறுவனம், இந்தி மொழியில் மட்டுமின்றி தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நூல்களை வெளியிடுவதோடு, பதிப்பகங்களின் நூல்களையும் விற்பனைக்கு ஏற்கிறது.
இந்நிறுவனம் வெளியிட்டுவரும் Best Sellers நூற்பட்டியல், நூல் வழங்கும் எழுத்தாளர்கள் ஓரளவேனும் பங்குத்தொகை[Royalty] பெறுகிறார்கள் என்று நம்பவைக்கிறது. இந்நிலை, எழுத்தாளர்களைத் தொடர்ந்து மின் நூல்கள் எழுதத் தூண்டும் என்பது உறுதி.
மின் நூல்களை வெளியிட விழையும் எழுத்தாளர்களுக்கு உதவிட எண்ணி, 12 மின் நூல்கள் வெளியிட்ட என் அனுபவத்தை இங்கு பதிவு செய்கிறேன்[நூல்களின் பட்டியல் அடுத்த பதிவில்].
மின் நூல் வெளிடுதல் தொடர்பான கணினி நுட்பங்களை நான் அறிந்திருக்கவில்லை. ஆங்கிலத்தில் அமேசான் வழங்கிய நெறிமுறைகளை மட்டுமே பின்பற்றி, கிண்டிலுக்கான நூல்களைத் தயாரித்தேன்.
இனி, என் அனுபவப் பதிவை வாசிக்கலாம்.
படிநிலை ஒன்று:
அமேசான் கிண்டிலில் வடிவமைக்கப்படவிருக்கும் ஆவணம்[document] குறைந்த அளவாக 2000 சொற்களைக் கொண்டதாக இருத்தல் நன்று. இது 20 பக்கங்களை உள்ளடக்கியதாக அமைய வாய்ப்புள்ளது. இது கிண்டில் பதிப்பில் 25 அல்லது 26 பக்கங்களாக[வரிவடிவ எழுத்துக்கள் சற்றே பெரிதாக இருக்கும்] விரிவடையும்.
ஆவணத்தில் இடம்பெற்றுள்ள சொற்களின் எண்ணிக்கையை அறிந்திட, 'countofwords.com' என்னும் தளத்தைப் பயன்படுத்தலாம்.
மொத்தப் பக்கங்களை முகப்புப் பக்கத்தில்[home page] இடது மேல் மூலையிலுள்ள 'file' ஐ கிளிக் செய்து, மாதிரி அச்சுப்படிவத்தைத்[print>print preview] தேர்வு செய்து அறிய முடியும்.
படிநிலை இரண்டு:
முழுமையாக வடிவமைக்கப்பட்ட கோப்பை[document], 'DOCX' ஆக மாற்றியமைப்பது[[For English language books, we accept several formats like .doc, .docx, .epub, .pdf but for Hindi and Tamil, we accept only .doc and .docx formats -Amazon]அமேசான் கிண்டிலில் நூலை வடிவமைப்பதற்கான அடுத்த படி ஆகும்.
மாற்றுவதற்கு 'ஆவண மாற்றி'[convert document to docx]யைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்[https://document.online-convert.com/convert-to-docx].
docx ஆக மாற்றப்பட்ட ஆவணம், 'file exploorer' இல் சேமிக்கப்பட்டிருக்கும்.[பின்னர், docx பதிவேற்றம்[upload] செய்யப்படவிருப்பதால், அது சேமிக்கப்பட்டிருக்கும் ஆவணக் கோப்புறையை[folder] தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும்{Location... OS[C:]>users>flle folder>downloads...} தவறுதலாக வேறொன்றைத் தேர்வு செய்தல் கூடாது.
படிநிலை மூன்று:
கிண்டிலில் வெளியிடுவதற்கு ஏற்ற வகையில், docx ஐ மாற்றி அமைத்திடல் வேண்டும். அதற்கும் அமேசான் கிண்டிலே உதவுகிறது.
அந்தச் சாதனம்.....
'Kindle Create' ஆகும். அதைப் பதிவிறக்கம் செய்து நிறுவி[install செய்தல்], தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.
kindle create free download என்று தேடுபொறியில் பதிவு செய்வதன் மூலம் எளிதாக நிறுவலாம்[Kindle Create | Amazon Kindle Direct Publishing
https://kdp.amazon.com/en_US/.../GHU4YEWXQGNLU94T
Use Kindle Create (PC or Mac) to transform your completed manuscript into a ... Download (MacOS 10.9 or later) ... Reflowable eBooks allow the reader to resize text and are available on all Kindle devices and free Kindle reading applications.
Kindle Kids' Book Creator · Building Your Text-Heavy ...]
படிநிலை நான்கு:
மின் நூல் ஆசிரியர்/வெளியீட்டாளர் பற்றிய[வங்கிக் கணக்கு, பெயர்{புனை பெயர் அல்ல} முதலானவை] அனைத்து விவரங்களையும் அதற்கான படிவத்தில் பதிவு செய்தல் வேண்டும்[பணப் பரிமாற்றம் செய்வதற்காக]. பிழை ஏதும் நேர்தல் கூடாது.

தொடரும்.....
-------------------------------------------------------------------------------------------------------------------------அன்புகொண்டு, பிழை காணின் தவறாமல் குறிப்பிடுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக