மேற்கண்டது நாளிதழில் வெளியான செய்தி[நகல் பதிவு].
இதைவிடவும் வேறெவ்வகையிலும் ஆணினத்தை இழிவுபடுத்துதல் சாத்தியமே இல்ல.
இந்த நடிகைக்கு ஓர் ஆண்மகனாக நம் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறோம்.
இந்த அடாவடித்தனமான விமர்சனத்திற்காக இவர் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது நீதிப் ‘பெரும் பேரரசர்’ சுவாமிநாதன் போன்ற நீதிபதிகளின்(ஆண்கள்) கடமை என்றாலும், அவர்கள் தாங்களும் ஆண் வர்க்கத்தினரே என்பதை மனதில்கொண்டு, இவரைக் கைது செய்து விசாரித்து, இவருக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்குவார்கள் என்று நம்புகிறோம்.
இவருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்து அறிந்துகொள்ளவும் பேரார்வத்துடன் காத்திருக்கிறோம்.
தண்டனை எதுவாயினும், பெண்ணின வரலாற்றிலேயே மிக மிகத் துணிச்சலான நடிகையாக அறியப்படும் இவரை மனதாரப் பாராட்டுகிறோம்.
நடிகை திவ்யா பந்தனாவுக்கு நம் ஆயிரம் கோடி வந்தனங்கள்! ஹி... ஹி... ஹி!!!

