எனது படம்
மனிதன் விசித்திரமானவன்; விரும்பியது கிடைக்காவிட்டால் விதியை நொந்துகொள்கிறான்; தடங்கல் ஏதுமின்றி கிடைத்துக்கொண்டிருந்தாலோ, “இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்” என்று பித்துப்பிடித்து அலைகிறான். ஆசை ஐயா ஆசை... பேராசை! தடை எதுவும் இல்லாவிட்டாலோ அது அடங்கவே அடங்காது!

திங்கள், 5 ஜனவரி, 2026

தடை ஏதும் இல்லையென்றால் ஆசை அடங்காது... அடங்கவே அடங்காது!!!

ணவனிடம் பெறும் உடலுறவுச் சுகம் கட்டுபடி ஆகாத நிலையில், ஒரு பெண் கள்ள உறவுக்கு  ‘அது’ விசயத்தில் ‘கில்லாடி’யான ஒருவனைத் தேடிக்கொள்வதும், அவர்களின் காம லீலை கணவனுக்குத் தெரிந்தால், அவர்களை அவன் கண்டிப்பதும், திருந்தாவிட்டால், அவளை மட்டுமோ இருவரையுமோ தீர்த்துக்கட்டுவதும் சமூக நிகழ்வுகளாக[அடிக்கடி?] உள்ளன.

கொலை செய்வதன் பின்விளைவுகளை[சிறைத் தண்டனையும் தூக்கிலிடப்படுதலும்] எதிர்கொள்ள அஞ்சுபவனாக அவன் இருந்தால் கட்டிக்கொண்டவளையோ, இருவரையுமோ கண்டிப்பதோடு நிறுத்திக்கொள்வதுண்டு; கண்டும் காணாமல் இருந்துவிடும் மகானுபவர்களும் உள்ளனர்.

அப்படிப்பட்டவர்களைக் கணவனாகப் பெறும் கற்புக்கரசிகள்[அவர்களுக்குச் சொர்க்கச் சுகம் வழங்கும் பராக்கிரமர்களும்தான்] கொடுத்துவைத்தவர்கள்.

அப்படிப்பட்டவர்களில் கீழ்க்காண்போரும்[மேற்கண்ட கொலைக் குற்றத்தை நிகழ்த்தியவர்கள்] அடங்குவர்.

[இவர்கள் செய்த குற்றம் குறித்த வழக்கு விசாரணையில் உள்ளதால், அதைப் பற்றியோ அதற்கான தண்டனை குறித்தோ கருத்துச் சொல்வது நம் நோக்கமல்ல]

இவர்கள் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்; எவ்வளவு நேரமும் இணைந்திருந்து இன்பச் சுகத்தைத் திருப்தியாக அனுபவித்திருப்பார்கள்.

அது போதும்தானே?

அவ்வப்போதைய அந்தரங்கச் சுகம் போதாதென்று அடிக்கடிக் கூடிக் களிக்க ஆசைப்பட்டது ஏன்?

மனிதன் விசித்திரமானவன்; விரும்பியது கிடைக்காவிட்டால் விதியை நொந்துகொள்கிறான்; தடங்கல் ஏதுமின்றி கிடைத்துக்கொண்டிருந்தாலோ, “இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்” என்று பித்துப்பிடித்து அலைகிறான்.

ஆசை ஐயா ஆசை! அடங்காத ஆசை!!