இந்தியா பல்வேறு இனத்தவருக்கும் உரிமையானது என்றாலும், ஒவ்வொரு இந்திக்காரனும் இந்தியாவை இந்திக்காரனே ஆள வேண்டும்[குறிப்பாக, ‘பாஜக’ ஆட்சியில்] என்று நினைக்கிறான்.
இந்தியைப் பரப்புவதற்கு இந்திய மக்களின் வரிப்பணத்தில் மிகப் பெரும் தொகையை ஆளும் பாஜக செல்விடுவது, இந்திக்காரன்களின் ஆதரவைத் தக்கவைத்து, ஆட்சி[ஒன்றியம்]யில் நீடிக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆட்சியில் இருந்தபோதும், இல்லாத இன்றைய நிலையிலும் உரிய சன்மானம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு உடந்தையாக இருந்து சேவகம் செய்பவர் ‘அதிமுக’ பழனிசாமி[எடப்பாடியார்> அவ்வப்போது அவர்களைப் புறக்கணிப்பது போல் பேசுவதும் நடந்துகொள்வதும் வெறும் பாசாங்கு].
எடப்பாடி ‘ருசி’ கண்ட அடிமை. இந்த அடிமையை ஆண்டவானாலும்[இருந்தால்] திருத்த இயலாது.
இந்தத் தந்திரக்கார நரியின் ஒத்துழைப்புடன், சங்கித் தலைவர்கள்[நம்பர் 1 & நம்பர் 2] ‘தமிழ் ஆதரவாளர்’களாகத் தங்களைக் காட்டிக்கொள்வதெல்லாம் ‘வெளி வேடம்’ என்பது தமிழர்களுக்கு அத்துபடியாய்த் தெரியும் என்பதால்.....
சங்கிகளின் கட்சி[+கூட்டணி] இங்கு வேரூன்றுவதோ, ஆட்சியைக் கைப்பற்றுவதோ ஒருபோதும் நடைபெறாது.
மீண்டும் முதல்வராகும் எடப்பாடியின் கனவும் பலிக்காது.
ஆகவேதான், ‘அதிமுக’வுடனும் ‘பாஜக’வுடனும் கூட்டணி அமைத்துப் பலன் பெறலாம் என்று கனவுகூடக் காண வேண்டாம் என்று அமமுக, தேமுதிக, பாமக[இரு அணிகள்] ஆகிய கட்சிகளின் தலைவர்களையும், வெற்றிக் கட்சித் தலைவர், ஓபிஎஸ், சீமான், சசி அம்மா ஆகியோரையும் வேண்டிக்கொள்கிறோம்.
பரிந்துரை> எச்சரிக்கையும்கூட:
பெருமதிப்பிற்குரியீர், வடக்கன்களுக்கு அடிமை ஆகாமல், தமிழருக்காகக் கட்சி நடத்துங்கள்.
நடத்தினால்.....
2026 தேர்தலில் அதிக அளவில் வெற்றி வாய்ப்பைப் பெறாவிட்டாலும், மக்களிடம் இப்போது உள்ள ஆதரவையேனும் தக்கவைக்கலாம்.
ஆகவே, எப்போதும் தமிழர்களாகவே இருங்கள்; தமிழர்களுக்காகவே கட்சி நடத்துங்கள்; அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கத்துடனேயே தேர்தலில் போட்டியிடுங்கள்.
எதிர்பார்க்கும் பலன் கிட்டுகிறதோ அல்லவோ, தமிழினம் உங்களை வாழ்த்தும்; நன்றி செலுத்தும்; என்றென்றும் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கும்.

