எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 20 ஜனவரி, 2026

“இது கட்டங்கடைசி வாய்ப்பு! ‘தி.மு.க.’ காலிகள் ஆட்சியைக் கலைச்சிடுங்க பிரதமரே!”

நவீன அரசியல் சாணக்கியர் அமித்ஷுவைத் தளபதியாகக்கொண்ட பிரதமர் மோடி அவர்களே,

ஆளுநராம் ஆர்.என்.ரவி[ஆட்சியாளர்களுக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுப்பதற்கென்றே உம்மால் அனுப்பப்பட்டவர்] தி.மு.க. அரசால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டால், அதைக் கலைத்துவிடுவது முன்கூட்டியே நீர் தீட்டியுள்ள திட்டம்.

கடந்த ஆண்டுகளில், சட்டமன்றம் தொடங்கும்போதெல்லாம் உம்முடைய அறிவுறுத்தலின்படி, ஏடாகூடமாக எதையேனும் உளறிக்கொட்டிவிட்டு மன்றத்திலிருந்து ரவியார் வெளியேறுவார். தி.மு.க.வினர் அவரைச் சற்றேனும் அவமதிக்கும் வகையில் விமர்சனம் செய்வார்கள். 

அந்த அவமதிப்பு அத்தனைக் கனமானதாக இருந்ததில்லை என்பதாலோ என்னவோ, தி.மு.க. ஆட்சியைக் கலைப்பதை நீர் தவிர்த்துவந்தீர்.

இன்று[20.01.2026] நடந்த சட்டமன்றக் கூட்டத்திலும், ரவியானவர் அவமதிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன[குறிப்பாக, 'பாஜக’ ஆதரவு ஊடகங்கள்> வரிவிடாமல் படித்திருப்பீர் என்பது எம் நம்பிக்கை].

ரவி அவமானப்படுத்தப்பட்டதைக்[கனமானதாக இல்லாமல் லேசானதாக இருப்பினும்] காரணம் காட்டி, உடனடியாகக் கலைப்பு[தி.மு.க. ஆட்சி] வேலையைச் செய்துமுடிப்பீர் என்று நம்புகிறோம்.

2026 தேர்தல்வரை தி.மு.க. ஆட்சி நீடித்தால், தில்லுமுல்லுகள் பல செய்து, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அவர்கள் கைப்பற்றுவார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்.

கில்லாடி ரவியின் முழுமையான ஆளுகையின் கீழ் தமிழ்நாடு இருந்தால்தான், கூட்டணிக் கட்சிகளின்[கொத்தடிமைகள்] துணையுடன் அதிதீவிரப் பிரச்சாரம் செய்து, தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிப்பது சாத்தியமாகும் என்றும் உம்மை எச்சரிக்கிறோம்.

வெல்க நீவிர்! தமிழ்நாட்டில் மலர்க ‘பாஜக’ ஆட்சி!!