இறப்பு(Death) எல்லோருக்கும் பொதுவான நிகழ்வுதான். ஆனால், அது நிகழ்வதைப் பார்த்து[நினைத்தும்தான்] நாம் பெரிதும் அஞ்சுகிறோம். அதைப் பற்றிப் பேசுவதற்குகூடத் தயங்குகிறோம்.
வயதான நிலையில் இயற்கையான மரணம் நிகழும்போது, மரணிப்பவர்கள் அதிக அளவில் வலிகளை உணரமாட்டார்கள் என்று சொல்லப்பட்டாலும், அவர்களின் உடல் வெளிப்படுத்தும் அறிகுறிகள் நம்மை அச்சுறுத்துவனவாகவே உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை:
4.இறக்கும் நிலையில் இருக்கக்கூடியவர்கள் அதிகம் தூங்குவார்கள். சில சமயம் பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிடுவார்கள்.
5.செயல்பாட்டை இழக்கும் உறுப்புகளில் கடைசியில் இடம்பெறுவது செவிப்புலன் ஆகும். இறக்கப்போகிறவர்கள் கண்களை மூடிப் படுத்திருந்தாலும் அருகில் இருப்பவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்.
6.மரணம் நிகழ்கையில் அவர்களால் சிறுநீர், மலம் போன்றவை வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயலாது. தசைகள் தளர்வடைவது அதற்கான முக்கியக் காரணம்.
7.பசி உணர்வு சிறிதுகூட இருக்காது. உணவை விழுங்குவதும் சாத்தியப்படாது.
8.சில நேரங்களில் அவர்களின் உடலில் இருந்து Nail polish removerஇன் வாசனை வெளிப்படும்[நெய்ல் பாலிஷ் ரிமூவர் கொண்டு நகத்தில் உரிந்த பாலிஷை அகற்றலாம்].
10.சிலருக்கு இறப்பதற்கு முன்பு மனக் குழப்பம் ஏற்படும். தாங்கள் யார் என்பதை மறந்துவிடுவார்கள். தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் நினைவுகூர்தல் இயலாது.
11.அவர்கள் எதிர்பாராத மன உறுதியுடன் எழுந்து உட்காருவார்கள். ஆனால் அது தற்காலிகமானதே. மறுபடியும் அவர்களின் நிலை மோசமாகி இறப்பு நிலைக்குச் செல்வார்கள்.
12.பொதுவாக இறப்பு வரும்போது தசைகள் தளர்வடைவதன் காரணமாக வாய் திறந்த மாதிரி இருக்கும்; கண்கள் விட்டத்தை[மேல்நோக்கி]ப் பார்ப்பதுபோல் தோன்றும். இறுதியில் மூச்சும், இதய துடிப்பும் நின்று இறப்பைத் தழுவுவார்கள் அவர்கள்.
====================
நன்றி:
https://kalkionline.com/wellness/12-mysterious-signs-of-approaching-deathwarning-body-changes