//2016 முதல் 2025 வரையிலான கடந்த 10 ஆண்டுகளில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அலுவலகத்திற்கு நீதிபதிகளுக்கு எதிராக ஊழல், பாலியல் அத்துமீறல்கள் அல்லது மற்ற கடுமையான ஒழுங்கீனங்கள் தொடர்பாக மொத்தம் 8,630 புகார்கள் வந்துள்ளன. அதிகபட்சமாக, 2024 ஆம் ஆண்டில் 1,170 புகார்கள் வந்துள்ளன எனவும், 2025 ஆம் ஆண்டில் 1,102 புகார்கள் வந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது// -இது அண்மைச் செய்தி[https://www.puthiyathalaimurai.com/india/over-8000-complaints-filed-against-sitting-judges-in-10-years].
கொஞ்சநஞ்சமல்ல, 8630 புகார்கள். பாதிக்கப்பட்டும் புகார் தராதவர்களின் எண்ணிக்கை இதைவிடவும் அதிகம் இருக்கலாம்.
லஞ்சம் வாங்குவது போன்ற ஊழல்களுக்கிடையே, பாலியல் குற்றங்களில்[+ஒழுங்கீனங்கள்] ஈடுபடுபவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரம் இது.
அரசாங்கத்தின் ஏனையத் துறைகளில் போலவே, நீதித் துறையிலும் நச்சுக் கிருமிகள் ஊடுருவியிருப்பதை உறுதிப்படுத்துகிறது மேற்கண்ட தகவல்.
நேர்மையும் நல்லொழுக்கமும் உள்ள நீதிபதிகளுக்கிடையே கணிசமான அளவில் இவர்கள் இருப்பது ஆபத்தானது.
இவர்கள் மிகக் கடுமையான தண்டனைக்குரியவர்கள்.
இப்படிப்பட்டவர்களை விமர்சனம் செய்தால், செய்பவர்கள் மீது இவர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கிறார்கள். அலையவிட்டு அவமானப்படுத்துகிறார்கள்; தண்டனை பெற்றுத்தரவும் தவறுவதில்லை.
எனவே,
இம்மாதிரி அவமதிப்பு வழக்குகளை[உண்மையில் அவமதித்திருந்தால்], ஒழுக்கங்கெட்ட நீதிபதிகள் விசாரிப்பதற்குத் தடை விதித்து, மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நீதிபதிகளிடம் வழக்கை ஒப்படைத்தல் வரவேற்கத்தக்கதாகும்.
நீதிபதிகளும் மனிதர்கள்தான்; அவர்கள் அவதாரங்களோ அபூர்வப் பிறவிகளோ அல்ல என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
உச்ச நீதிமன்றமும் அரசு நிர்வாகமும் இணைந்து இதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புவோம்.
