ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

புத்தியைக் கூர்தீட்டும் பத்துக் கேள்விகள்!

ஜூன், 2014இல், 10 கேள்விகளைக் கொடுத்து, பதில் எழுதச் சொன்னார் நண்பர் கில்லர்ஜி[தொடங்கி வைத்தவர் நண்பர் மதுரைத் தமிழன். இருவருக்கும் நன்றி]. எழுதினேன். தற்செயலாய்த் திரும்ப வாசித்தபோது, இப்போதைய என் கிறுக்கல்களை விடவும் இது தேவலாம் போல் தோன்றியது. மீண்டும் பகிர்கிறேன்.

கேள்வி1: உங்கள் நூறாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
பதில்: கீழ்க்காணும் வாசகத்தைப் பத்திரிகைகளில் விளம்பரமாகக் கொடுப்பேன். வேறு கொண்டாட்டம் ஏதுமில்லை.
வாசகம்: ‘கடவுளே, நீர் இருப்பது உண்மையானால்..........இனவிருத்தி செய்யவும், இன்பதுன்பங்களை அனுபவிக்கவும் என்னைப் படைத்தீர். என்னைப் பொருத்தவரை நூறாண்டுகள் வாழ்ந்து உம்முடைய நோக்கத்தை நிறைவு செய்திருக்கிறேன். நீர் எனக்கு நன்றியுடையவர் ஆகிறீர். அந்த நன்றியை எவ்வாறு வெளிப்படுத்தப் போகிறீர் என்பதை நான் அறியச் சொல்வீரா? உணர்த்தவாவது செய்வீரா?’

கேள்வி 2: என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

பதில்: 150 ஆண்டுகள் வாழ்வதற்கான வழிவகைகளை!

கேள்வி 3: கடைசியாகச் சிரித்தது எப்போது?

பதில்: நான்கு நாட்கள் முன்பு, பேருந்து நிலையத்தில் ஒரு கிழட்டுப் பிச்சைக்காரன் கை நீட்டியபோது, சட்டைப்பையில் சில்லரை இருக்க, “சில்லரை இல்லப்பா” என்று சொன்னதை நினைக்கும்போதெல்லாம் என் அடிமனதிலிருந்து சிரிப்பொலி எழுகிறது. சிரிப்பது என் மனசாட்சி!

கேள்வி 4: 24 மணி நேரம் ‘பவர்கட்’ ஆனால் நீங்கள் செய்வது என்னவாக இருக்கும்?

பதில்: பவர்கட்டா? நீங்கள் இந்த மண்ணுலகைச் சொல்கிறீர்கள். நான் உணவு உண்ட நேரமும் உறங்கிய நேரமும் போக, எந்நேரமும் வான வெளியில் சஞ்சரிப்பவன். அங்க ஏதுங்க பவர்கட்? கோடானுகோடி நட்சத்திரங்கள் ஜொலித்துக்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?!

கேள்வி 5: உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?

பதில்: வேறு எதனையும்விட வலிமை வாய்ந்தது காம உணர்ச்சி. அதைக் கட்டுப்படுத்தி வாழப் பழகிவிட்டால் வாழ்க்கையில் நிறையவே சாதிக்கலாம்.

கேள்வி 6:  உலகத்தில் உள்ள பிரச்சினையில், உங்களால் தீர்க்க முடியுமென்றால் எந்தப் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறீர்கள்?

பதில்: பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணங்களாய் இருப்பவை ‘வயிற்றுப்பசி’யும் ‘சதைப்பசி’யும்தான். இவற்றைத் தீர்ப்பதே என் விருப்பம்.

கேள்வி 7: நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?


பதில்: என்னிடமேதான். என்மீது என்னைவிடவும் அக்கறை கொண்டவர் வேறு எவர் இருக்க முடியும்?


கேள்வி 8: உங்களைப் பற்றித் தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?


பதில்: நான் மிக மிகச் சாதாரணன். என்னைப் பற்றித் தவறான தகவலைப் பரப்புவதால், பரப்புவருக்கு எந்தவிதப் பலனும் விளையாது. இதைப் பற்றிய கவலை எனக்கு எப்போதும் இருந்ததில்லை.


கேள்வி 9: உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?


பதில்: ஆரத்தழுவி முதுகில் தட்டிக்கொடுப்பேன். ஆறுதல் வார்த்தைகளைவிடவும் இது அதிகப் பலன் தரும்.


கேள்வி 10: உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?


பதில்: எதுவும் செய்யலாம். உற்ற நண்பனிடம்கூடக் கேட்கக் கூடாத கேள்வி இது.

    35 comments :

    1. பதில்கள் சிந்திக்க வைக்கின்றன.
      ReplyDelete

      Replies
















      1. பெருந்தன்மையுடன் வருகைபுரிந்து பாராட்டியிருக்கிறீர்கள்.

        மிக்க நன்றி King Raj.
        Delete

    2. பதில்கள் ஒவ்வொன்றும் இயல்பானதாகவும் ஏற்றுக்கொள்ளத் தக்க சிறப்பான
      பதில்களாகவும் இருந்தன அருமை ! வாழ்த்துக்கள் கிழவா :))
      ReplyDelete

      Replies
















      1. நன்றி...நன்றி அம்பாளடியாள்.
        Delete

    3. பத்துக்குப் பத்தும்
      உங்கள்
      முத்தான பதில்கள்
      எங்கள்
      உள்ளத்தை உரசுதே!
      ReplyDelete
    4. தங்களுடைய பதில்களைப் படித்தேன். அவை எதார்த்தமானவை; சுவை மிக்கவை.

      என் பதில்கள் தங்களின் பாராட்டுதலைப் பெற்றதில் மகிழ்ச்சி. மிக்க நன்றி.
      ReplyDelete
    5. நண்பரே! பதில்கள் அனைத்தும் அருமை அருமை அருமை!!!!!!!!!!!!! மிகவும் ரசித்தோம்! உண்மையான, யதார்த்தமான, ரசனையான பதில்கள்! அசத்திவிட்டன நண்பரே!

      பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!
      ReplyDelete

      Replies
















      1. நன்றி...நன்றி...நன்றி துளசிதரன்.
        Delete

    6. கலக்கல் பதில்கள்.அதிலும் 2 வது சுப்பர்.
      ReplyDelete

      Replies
















      1. மனமுவந்த நன்றி யோகன் பாரிஸ்.
        Delete

    7. #என்னிடமேதான். என்மீது என்னைவிட அக்கறை கொண்டவர் வேறு எவர் இருக்க முடியும்?#
      இந்த பதில் நேர்மையானது ,மிகவும் ரசித்தேன் !
      த ம 4
      ReplyDelete

      Replies
















      1. நன்றி...நன்றி பகவான்ஜி.
        Delete

    8. This comment has been removed by the author.
      ReplyDelete
    9. தங்களை தூண்டி(ல்)விட்ட நானே தாமதமாக வருவதற்க்கும் மன்னிக்கவும் ஐயா... 2 வது பதில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது காரணம் யாருமே இப்படி சொன்னதில்லை ஆக, தங்களுக்கு 100 ஆண்டுகள் போதாது.. ? அதைப்போல 6 வது பதிலும் வித்தியாசமாக இருந்தது, 9 வது பதில் அனுபவத்தின் பதில் அருமை.
      எனது வார்த்தைக்கு மதிப்பளித்து பதிவிட்ட தங்களுக்கு நன்றி ஐயா
      எனது ''வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகள்'' படிக்க...
      ReplyDelete

      Replies
















      1. மன்னிப்பா? இனியும் இப்படிக் கூற வேண்டாம். தங்களால் பயனடைந்தவன் நான்தானே.

        ''வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகள்' தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது; படிக்கத் தூண்டுகிறது.

        மிக்க நன்றி கில்லர்ஜி.
        Delete

    10. // என்மீது என்னைவிட அக்கறை கொண்டவர் வேறு எவர்...? // - பல பதில்கள் உங்கள் பாணியில் வித்தியாசம் + சுவாரஸ்யம்...

      பாராட்டுக்கள்...
      ReplyDelete
    11. வலைப்பதிவில் பிரச்சினையென்றால் ஓடிப்போய் உதவுகிற தாங்கள், மனம் திறந்து பதிவர்களைப் பாராட்டவும் தயங்குவதில்லை.

      மனம் நிறைந்த நன்றி தனபாலன்.
      ReplyDelete
    12. சிறப்பாக பதில்களை தந்து இந்த தொடர் ஒட்டத்தில் பங்கு கொண்டதற்கு மிகவும் நன்றி & பாராட்டுக்கள்
      ReplyDelete

      Replies
















      1. வருகை தந்து பாராட்டியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றி மதுரைத் தமிழன்.
        Delete

    13. பளிச் பதிகள்.... நேர்மையான பதில்கள் போல தெரிகிறது... நேர்மையாகவே இருக்கட்டும்...
      ReplyDelete

      Replies
















      1. 2, 4 ஆகிய கேள்விகளுக்கான பதில்கள் மிகைப்படுத்தப்பட்டவை ஆயினும், அதுவும் தேவையே என்று நான் நினைத்ததில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

        மனப்பூர்வ நன்றி பாண்டியன்.
        Delete

    14. பதில்கள் எல்லாமே நன்று. அதிலும் 1, 3, 7 ஆகியவற்றை மிக ரசித்தேன். அசத்திட்டீங்க கா.கி.
      ReplyDelete
    15. தங்கள் வருகையும் பாராட்டும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

      நன்றி...நன்றி பால கணேஷ்.
      ReplyDelete
    16. " வேறு எதனையும்விட வலிமை வாய்ந்தது காம உணர்ச்சி. அதைக் கட்டுப்படுத்தி வாழப் பழகிவிட்டால் வாழ்க்கையில் நிறையவே சாதிக்கலாம் "

      மிகவும் உண்மை ஐயா ! " சீ இவ்வளவுதானா என புரிந்துகொள்ளும் " அளவுக்கு நமது சமூக சூழ்நிலை அமையாததே அத்தனை பாலியல் வக்கிரங்களுக்கும் காரணம்

      " பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணங்களாய் இருப்பவை ‘வயிற்றுப்பசி’யும் ‘சதைப்பசி’யும்தான். "

      பெரும்பாலான அல்ல ஐயா, ஆதிகாலம் தொட்டு இன்றுவரை எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமே இவையிரண்டுதான் !

      நன்றி
      சாமானியன்
      saamaaniyan.blogspot.fr
      ReplyDelete

      Replies
















      1. கருத்திட்ட யாருமே இந்தப் பதில்கள் குறித்து ஏதும் சொன்னதில்லை.

        உங்கள் துணிச்சல் என்னை மகிழ்வித்தது.

        மிக்க நன்றி சாமானியன்.
        Delete

    17. ஐயா.... ஆறாவதுக்கான பதில் கொஞ்சம் அபத்தமாக இல்லை....

      இருப்பினும் பதில்கள் அனைத்தையும் இரசித்தேன்.
      ReplyDelete
















      1. என்னை வெகுவாகப் பாராட்டியே பழக்கப்பட்ட நீங்கள் முதன்முறையாக விமர்சித்திருக்கிறீர்கள். இந்த நடுநிலைதான் விமர்சகருக்கான முக்கிய தகுதி. மகிழ்ச்சி அருணா.

        இந்தப் பதிலும், கேள்வி 10க்கான பதிலும் ‘அசிங்கம்...ஆபாசம்’ என்று ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். [ஏனோ அதைப் பின்னூட்டமாக வெளியிடவில்லை!]

        நண்பர்களுடன் நேரில் விவாதித்துமிருக்கிறேன். ஆனாலும், இந்த என் அபிப்ராயத்தில் மாற்றம் சிறிதும் ஏற்படவில்லை. என் வாழ்க்கை அனுபவங்களும், பொது அறிவும் காரணங்களோ என்னவோ? [நண்பர் சாமானியனின் கருத்தை ஒருமுறை படியுங்கள்]

        பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி அருணா.
        Delete

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++















    1. =================================================================================



4 கருத்துகள்:

  1. மீண்டும் அசை போட்டு படித்தேன் ஆசையோடு...

    பதிலளிநீக்கு
  2. கருத்துப்பெட்டியை மூடி மூடி வைப்பதால், யாரும் கருத்திட மாட்டார்களோ என்று நினைத்தேன். வருகை தந்து ஆசையோடு படித்து மகிழ்ந்திருக்கிறீர்கள்.

    நன்றி நண்பர் கில்லர்ஜி.

    இனி, பெட்டியைப் பூட்டுவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல முடிவுக்கு நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in/

    பதிலளிநீக்கு