“அகற்றப்பட்ட என்னுடைய காலின் கட்டை விரல் வலிக்கிறது!” -சொன்னவர் மறைந்த கவிஞர் இன்குலாப். இது நடந்த நிகழ்ச்சி.
படம்: google
#மறைந்த கவிஞர் ‘இன்குலாப்’ அவர்களுக்குச் சர்க்கரை நோய் முற்றிய நிலையில் ஒரு கால் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. ஒரு காலை இழந்த நிலையிலும் தீரத்துடன் அவரின் போராட்டம் தொடர்ந்தது...இருத்தலுக்கான போராட்டம்.சில மாதங்களுக்கு முன்பு நானும் நண்பர் வைகறையும் கவிஞரைச் சந்திக்கச் சென்றோம். அவர் முகம் வாடியிருந்தது. அவரே சொன்னார்: “சமீப காலமாக ஒரு சித்ரவதையை அனுபவிக்கிறேன். அகற்றப்பட்ட என்னுடைய காலின் கட்டை விரல் வலிக்கிறது!”
“என்ன சொல்கிறீகள் இன்குலாப்? இல்லாத காலின் கட்டை விரலில் வலியா?” என்றேன்.
“ஆமாம்! இல்லாத காலின் கட்டை விரல்தான் வலிக்கிறது...தாங்க முடியாத வலி. கால் அரிக்கிறது. கையைக் கொண்டுபோனால் அங்கே கால் இல்லை. வெற்றிடம்! ஆனாலும் அரிப்பு தாங்க முடியவில்லை...துடிக்கிறேன்” என்றார் வேதனையோடு.
“டாக்டரிடம் காண்பித்தீர்களா?”
“என் மகளே ஒரு மருத்துவர்தானே! மூளையில் முன்னரே பதிவான வலியாம் அது! அதுக்குப் பேரு ‘ஃபாண்டம் பெயின்’ என்கிறார்கள். அவயவத்தை இழந்த பின்னரும் வலி தொடர்வானேன்? அப்படியானால், உடல் உறுப்பு என்பதெல்லாம் மூளையின் நீட்சியா? நமது இருத்தலை உணரவைக்கும் சிருஷ்டியின் சூட்சுமமா? என்ன...என்ன இதெல்லாம்?”
கண்களில் ஆயாசத்துடன் இன்குலாப் கேட்டார். விடை தெரியாத கேள்விகள்!#
கவிஞர் இன்குலாப்பைச் சந்தித்து உரையாடியவர் ‘தஞ்சாவூர்க் கவிராயர்’.
கவிராயருக்கும் இப்பேட்டிக் கட்டுரையை வெளியிட்ட ‘தி இந்து’[09.12.2016] நாளிதழுக்கும் நம் நன்றி.
இப்பதிவு, கட்டுரையின் ஒரு பகுதி மட்டுமே.
இப்பதிவு, கட்டுரையின் ஒரு பகுதி மட்டுமே.
===============================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக