“எங்கள் கட்சி வரும் தேர்தலில்[2026> தமிழ்நாடு சட்டமன்றம்] எந்தக் கூட்டணியில் இணைகிறது என்பதை அடுத்தச் சில நாட்களில் தெரிவிப்போம்.”
“ஆட்சியில் பங்களிக்கும் கூட்டணியில் மட்டுமே எங்கள் கட்சி இடம்பெறும்.”
“பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது. தொகுதிப் பங்கீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.”
“நாங்கள் இணையும் அணியே வெற்றிக் கூட்டணியாக அமையும்; ஆட்சியைக் கைப்பற்றும்.”
மேற்கண்டவை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு, கோடிகளில் புரளும் கேடி அரசியல் தலைவர்களுடன், பேரம் பேசி முடித்த... பேசிக்கொண்டிருக்கும் சுயநல அரசியல் கட்சித் தலைவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
பட்டியல்?தேவையில்லை. அவர்கள் உங்களால் நன்கு அறியப்பட்டவர்கள்தான்.
கட்சியின் கொள்கைகளைப் பட்டியலிட்டு, மக்களுக்குச் செய்யவுள்ள பணிகள் குறித்த திட்டங்கள் இந்தக் கழிசடைகளிடம் இல்லை.
வைப்புத் தொகையைக்கூடப் பெற இயலாத வகையில் இந்த நாசகாரக் கும்பல்களுக்கு வரும் தேர்தலில்[2026] பாடம் கற்பிப்போம்.
