எனது படம்
மனிதன் விசித்திரமானவன்; விரும்பியது கிடைக்காவிட்டால் விதியை நொந்துகொள்கிறான்; தடங்கல் ஏதுமின்றி கிடைத்துக்கொண்டிருந்தாலோ, “இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டும்” என்று பித்துப்பிடித்து அலைகிறான். ஆசை ஐயா ஆசை... பேராசை! தடை எதுவும் இல்லாவிட்டாலோ அது அடங்கவே அடங்காது!

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

காபா[Kaaba]வைக் கடவுள்[அல்லாஹ்] காப்பாற்றாதது ஏன்?!

கூகுள் தேடலில், ‘புனித காபா[Kaaba]’ என்னும் தொகைச் சொல்லைப் பதிவு செய்து ‘கிளிக்’கியதில், பின்வரும்* தகவல்கள் கிடைத்தன. அவற்றை வாசித்துவிட்டு, இங்கே நாம் முன்வைத்துள்ள கேள்விகளுக்கு விடை தேட முயலுங்கள். நன்றி.

======================

‘புனித காபா’ என்னும் பெரிய மசூதி எங்கிருக்கிறது, எப்போதிருந்து இருக்கிறது, எவரெவரால் எல்லாம் கட்டப்பட்டது என்பது நமக்கு ஒரு பொருட்டல்ல.

அந்தப் புனிதமான மசூதி குறித்து விடை அறியப்படாத சில கேள்விகள் உள்ளன. அவை:

*அதை ‘இறைவனின் இல்லம்’ என்கிறார்களே, இறைவன் என்றொருவர் இருப்பதாகக் கொண்டாலும், அது இறைவனுக்கான இல்லமாக ஆனது எப்போதிருந்து? அங்கு இறைவன் தங்கியிருந்ததற்கான/இருப்பதற்கான ஆதாரம் ஏதும் உள்ளதா?

உள்ளது என்றால், உலக மக்கள் அறியும் வகையில்[குறைந்தபட்சம் இஸ்லாமியர்களேனும்...] அதை சமர்ப்பித்தவர் யார்? எப்போது?

*காபாவின் மூலையில் பொறிக்கப்பட்டுள்ள ‘கறுப்புக் கல்’ சொர்க்கத்திலிருந்து விழுந்த meteorite-இன் ஒரு பகுதி என்று நம்பப்படுகிறதாம். இஸ்லாமியரேனும் நம்பும் வகையில்.....

சொர்க்கத்திலிருந்து அது விழத் தொடங்கியபோது, சொர்க்கத்தில் தங்கியிருந்து, அந்த அதிசய நிகழ்வைக் கண்ணாரக் கண்டவர் யார்? அல்லது யாரெல்லாம்?

மேற்கண்ட இரு கேள்விகளுக்கும் இன்றுவரை மிகச் சரியான பதில்கள் இல்லை என்பது மட்டுமல்லாமல், கடவுள் தன்னுடைய தங்குமிடமான ‘காபா’[Kaaba]வை இயற்கைப் பேரழிவிலிருந்து காப்பாற்றத் தவறிவிட்டார் என்பதற்கு அடுத்து இடம்பெறும் காணொலியே ஆதாரமாக உள்ளது என்பது அறியத்தக்கது.

காணொலி:

நிலைமை இதுவாக இருக்க, இஸ்லாம் நெறி பரப்பியோர்/பரப்புபவர் தம் சொந்த மதத்தவரையே மூடநம்பிக்கைகளுக்கு உள்ளாக்கி, உலகின் பல்வேறு மதம்[மூடநம்பிக்கைகள் இல்லாதவை மிக மிக அரிது] இனத்தவருக்குமான ஆதிக்கப் போட்டியில், சிந்தித்துச் செயல்படவிடாமல் அவர்களைத் தடுத்துப் பின்தங்கியிருக்கச் செய்வது அறிவுடைமை ஆகுமா?

மிக முக்கியக் குறிப்பு:

இன்றைய அறிவியல் யுகத்தில், அத்துறையில் சாதனைகள் நிகழ்த்திய இஸ்லாமியர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் இல்லாதிருப்பதற்கு, அழுத்தமான மூடநம்பிக்கைகளில் அவர்கள்[இந்து மதத்தவர் அவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர்] சிக்குண்டு கிடப்பதே காரணம் என்பது அறியத்தக்கது.

=====================

*புனித காபா(Kaaba) என்பது சவூதி அரேபியாவின் மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம்(பெரிய மசூதி) மையத்தில் அமைந்துள்ள, இஸ்லாத்தின் மிகப் புனிதமான ஒரு கனசதுர வடிவிலான கட்டடம் ஆகும்; இது இஸ்லாமியர்களின் தினசரித் தொழுகையின் திசையாகவும்(கிப்லா), ஹஜ் யாத்திரையின் முக்கிய மையமாகவும் உள்ளது. மேலும், இது "இறைவனின் இல்லம்" என்று கருதப்படுகிறது. 

இஸ்லாமிய நம்பிக்கைகளின்படி, முதல் மனிதரான ஆதம்(Adam) அவர்களால் கட்டப்பட்டது. பின்னர், நபிகள் நாயகம், இப்ராஹிம்(Ibrahim), அவரது மகன் இஸ்மாயில்(Ismail) ஆகியோரால் மீண்டும் கட்டப்பட்டது. பல முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவே இறைவனை வணங்குவதற்கான முதல் இல்லம் என்று நம்பப்படுகிறது.

  • கருப்புக் கல்(Black Stone): காபாவின் ஒரு மூலையில் பொறிக்கப்பட்டுள்ள கருப்புக் கல், சொர்க்கத்திலிருந்து விழுந்த meteorite-ன் பகுதி என்று நம்பப்படுகிறது, இது சொர்க்கத்துக்கும் பூமிக்குமான இணைப்பின் சின்னமாகக் கருதப்படுகிறது.