அன்று வெளியானது +2 தேர்வு முடிவு.
‘அவன்’ தேர்ச்சி பெற்றிருந்தான்.
மாநிலத்தில் அவனுக்கே முதலிடம். முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார்
பள்ளித் தலைமை ஆசிரியர்.
பள்ளித் தலைமை ஆசிரியர்.
“அம்மா, அப்பா நான் ஃபர்ஸ்ட்” என்று
மனதில் ஒத்திகை பார்த்தவாறு ஓடினான்.
மனதில் ஒத்திகை பார்த்தவாறு ஓடினான்.
வீட்டில்.....
சாத்திய கதவுக்குள்ளிருந்து.....
ஓலமிடும் அம்மாவின் குரல்:
"குடிகார நாயே,
அடிடா... அடிச்சே கொன்னுடு.
நிம்மதியா நான் போய்ச் சேர்ந்துடுறேன்.”
கதவைத் திறந்துகொண்டு
தள்ளாடியவாறு அப்பன் வெளியேறினான்.
ஓடிக்கொண்டே நடத்திய தன் ‘ஒத்திகை’
அம்மாவின் ஒப்பாரியில் கரைந்துபோனதால்
கட்டாந்தரையில் கவிழ்ந்து படுத்துக்
குமுறிக் குமுறி அழுதான் ‘அவன்’!
