//ரவீந்திரநாத் தாகூர் எழுதிய "ஜன கண மன... " இந்தியாவின் தேசியக் கீதமாகும். இது மக்களின் மனதில் ஆட்சி செய்பவரும், பாரதத்தின் தலையெழுத்தை நிர்ணயிப்பவருமான இறைவனைப் போற்றுகிறது. 1950-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இது, பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், திராவிடம் (தென்னிந்தியா), ஒரிசா மற்றும் வங்காளம் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு, இந்தியாவின் பன்முகத்தன்மையை வலியுறுத்துகிறது// -விக்கிப்பீடியா.//ஜன கண மன - தேசிய கீதத்தின் தமிழ் அர்த்தம் (பொருள்):
ஜன-கன-மன-அதிநாயக ஜய ஹே: இந்திய மக்களின் மனதை ஆட்சி செய்யும் தலைவா உனக்கு வெற்றி!
பாரத-பாக்ய-விதாதா: பாரதத்தின் (இந்தியாவின்) நல்விதியை நிர்ணயிப்பவனே!
பஞ்சாப-சிந்து-குஜராத-மராட்டா-திராவிட-உத்கல-வங்க: பஞ்சாப், சிந்து, குஜராத், மராட்டியம், தென்னிந்தியப் பகுதிகள், ஒரிசா மற்றும் வங்காளம்[உன்னைப் போற்றுகின்றன].
விந்திய-ஹிமாசல-யமுனா-கங்கா: விந்திய மலைகள், இமயமலைகள், யமுனை & கங்கை நதிகள்(உன்னைப் போற்றுகின்றன).
உச்சல-ஜலதி-தரங்கா: அலைகளை எழுப்பும் இந்தியப் பெருங்கடல் (உன்னைப் போற்றுகிறது).
தவ சுப நாமே ஜாகே: உனது மங்களகரமான பெயரைக் கேட்டு, அனைவரும் விழித்தெழுகின்றனர்.
தவ சுப ஆசிஷ மாகே: உனது மங்களகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றனர்.
காஹே தவ ஜய காதா: உனது வெற்றியைப் பாடுகின்றனர்.
ஜன-கன-மங்கலதாயக ஜய ஹே: மக்களின் நல்வாழ்வை அருள்பவனே, உனக்கு வெற்றி!
பாரத-பாக்ய-விதாதா: பாரதத்தின் விதியை நிர்ணயிப்பவனே, உனக்கு வெற்றி!
ஜய ஹே, ஜய ஹே, ஜய ஹே: வெற்றி! வெற்றி! வெற்றி!
- ஜய ஜய ஜய, ஜய ஹே: வெற்றி, வெற்றி, வெற்றி, உனக்கு வெற்றி!// -விக்கிப்பீடியா.
***“சிவப்பு வண்ணத்தில் உள்ள அத்தனைச் சொற்களும் சொற்றொடர்களும் கடவுளைக் குறிக்கின்றன. இந்நிலையில், நம் தேசிக் கீதம் போற்றுவது நம் தேசத்தை அல்ல, அவரை[கடவுள்] மட்டுமே என்று சொல்லலாமா?” என்னும் கேள்வி எழுவதைத் தவிர்க்க இயலவில்லை.
பதில்:
“மொழியாக்கம் செய்த கூகுளாருக்கு நன்றி!”[ஹி... ஹி... ஹி!!!]