செவ்வாய், 28 ஜூன், 2011

கடவுளிடம் ஒரே ஒரு கேள்வி

                                                 கடவுளிடம் ஒரே ஒரு கேள்வி


கடவுளே,


கடந்த ஒரு வினாடி வரை உம்மை நாம் நம்பியதில்லை.


’நீர் எப்படித் தோன்றினீர்? உம்முடைய தோற்றம் எப்போது, எவ்விடத்தில்,
எவ்வாறு நிகழ்ந்தது என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு, விடை தெரியாத நிலையில்....................................................

ஆன்மிகவாதிகள் தரும் உம்மைப் பற்றிய விளக்கங்கள் வெறும்
அனுமானங்களே தவிர, அறிவு பூர்வமானவை அல்ல என்ற காரணத்தால்..........

நீர் ‘இருப்பதாக’ நாம் ஒப்புக் கொண்டதும் இல்லை. இருப்பினும்.............................

ஆன்மிகவாதிகள் எம் போன்றவர்கள் மீது வீசுகிற சில கேள்விக் கணைகளை எம்மால் புறம் தள்ள முடியவில்லை.

அவை............................

“ஏன், எப்படி.....என்பன போன்ற கேள்விகள் கிடக்கட்டும், உன் கண் முன்னால்
கோள்களும் நட்சத்திரங்களும் எல்லையில்லாத பெரு வெளியில் இறைந்து
கிடப்பதையும் இயங்கிக் கொண்டிருப்பதையும் காண்கிறாய். இவையெல்லாம்
பொய்; மாயை என்கிறாயா? இல்லையே. ‘உண்மை’ என ஒப்புக் கொள்கிறாய்தானே?

நீ இருப்பது; நாம் இருப்பது; நாம் இயங்குவது.............எல்லாம் உண்மைதானே?

உனக்கு ஆறாவது அறிவு இருப்பதை நம்புகிறாய்.

 அந்த அறிவைக் கொண்டுதான் சிந்திக்கிறாய்.

கடவுளைப் பற்றி ஆயிரம் கேள்விகள் கேட்கிறாயே, எல்லாம் அந்த ஆறாவது அறிவு இருப்பதால்தானே?

இந்த அறிவு ‘உண்மையானது’ என்பதை நீ மறுக்க முடியாது.

ஆனால், ஓர் உண்மையையும் நீ மறந்துவிடக் கூடாது.

உனக்கு வாய்த்திருக்கிற இந்த அறிவு நிரந்தரமானது அல்ல; அழியக் கூடியது.

அழியக் கூடிய இந்த அறிவு தானாகத் தோன்றியிருக்க முடியாது; இதைத் 
தோற்றுவிக்க இதைவிட ஆற்றல் வாய்ந்த ஓர் அறிவு தேவை.

 விவரிப்புக்கு அடங்காத அந்தப் ‘பேரறிவைத்தான் ‘கடவுள்’ என்கிறோம்.

அந்த அறிவு எப்படித் தோன்றியது என்ற கேள்வி அவசியமற்றது. ஏனென்றால்...

கோள்கள் இருப்பது போல, நீ இருப்பது போல, நாம் இருப்பது போல, நமக்கு
ஆறாவது அறிவு இருப்பது போல நம் அறிவுக்கும் மேலான ஓர் அறிவு 
இருக்கிறது என்பதை நீ நம்பித்தான் ஆகவேண்டும்”.

கடவுளே,

இவ்வாறாக எழுப்பப்படுகிற கேள்விகளை எம்மால் அலட்சியப் படுத்த
முடியவில்லை என்பது உண்மைதான்.

ஐம்புலன்கள் இல்லாமல் நீர் எப்படிப் பார்க்கிறீர், கேட்கிறீர்......என்பன போன்ற    
எத்தனயோ கேள்விகளை யெல்லாம் புறந்தள்ளிவிட்டு.........................

நீர் ஒருவர் ‘இருக்கிறீர்’ என்று தற்காலிகமாக ஏற்றுக் கொண்டு..........................

உம்மிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம்.

இந்தப் பிரபஞ்சம், எந்தவொரு அளவுகோலும் கொண்டு அளந்து அறிய
முடியாதது; நீளம், அகலம்,மேல்,கீழ் மையப்புள்ளி என்று எதுவுமே இல்லாதது; விளிம்பு நிலை அற்றது என்பதை எல்லாம் நாம் ஏற்கனவே விளக்கியிருக்கிறோம்.

இந்தப் பிரமிக்கத் தக்க.......................................................................................

கற்பனக்கு எட்டவே எட்டாத..........................................................................

பிரபஞ்ச வெளிக்கு நீர் ஒரே ஒரு கடவுள்தானா?

நீர் கடவுளாக இருந்தாலும் உம்மாலும் கணிக்கவே இயலாத....அளந்தறியவே இயலாத அனைத்து அண்டங்களுக்கும் நீர் ஒருவர்தான் கடவுள் என்று உம்மால் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா?

உம்மைப் போல இன்னும் எத்தனை கடவுள் இருந்தால், முழுமை பெறாத பிரபஞ்ச வெளியைக் கட்டி ஆள்வது சாத்தியமாகும்?


கடவுள்கள் பலர் என்றால், உங்களுக்குள் ஆதிக்கப் போட்டி வருமே?

போட்டியை எப்படித் தவிர்த்தீர்கள்?

சமரசமா? இல்லை, சமர் புரிந்து மற்றவர்களை அழித்துவிட்டு நீர் மட்டுமே அனைத்தையும் ஆள்கிறீரா?

பிரபஞ்சப் பரப்பையே அளந்தறிய முடியாத போது கடவுளரின்
எண்ணிக்கையையும் கணக்கிட முடியாதே?

கடவுளே,

கேள்விமேல் கேள்விகளை அடுக்கி உம்மை நோகடிப்பதோ, இழிவு படுத்து
வதோ எம் நோக்கம் அல்ல; அல்லவே அல்ல.


நீர் எமக்குத் தந்த பகுத்தறிவு இவ்வாறு கேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது.
அதைத் தடுக்க இயலவில்லையே ஐயா.

கேள்விகள் கேட்பதுகூடக் குற்றமா கடவுளே?

நீர் இருப்பது உண்மையானால், எல்லாம் வல்லவரான உம்மை இந்தக் கேள்விகள் களங்கப் படுத்திவிடுமா!?

ஓ.....கடவுளே,

இன்னும் உம்மிடம் கேட்பதற்குக் கேள்விகள் உள்ளன. அவற்றை இப்போதே முன் வைக்க நாம் விரும்பவில்லை.

இந்த ஒரு கேள்விக்கு நீர் பதில் தந்தால் போதும்.

அற்ப மனிதனான எம்மை மதித்து நீர் எம்முடன் தொடர்பு கொள்ள மாட்டீர்
என்பது எமக்குத் தெரியும்.

சரியான பதிலை உம்முடைய ‘அவதாரங்கள்’ மூலமாக அனைத்து மக்களும் அறியும் வகையில் பகிரங்கப்படுத்தும்.

உமது பதில் எமக்கு முழுத் திருப்தி அளித்தால் உம்மை நாம் நிரந்தரமாகஏற்றுக் கொள்வோம். கிஞ்சித்தும் சந்தேகம் வேண்டாம் எம் ஐயனே.

**********************************************************************************
**********************************************************************************

















5 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கு நன்றி சூர்யஜீவா.

    தங்களின் ‘சுய விவரம்’ படித்தேன்.

    தேடிக் கொண்டே இருங்கள்.இலக்கை
    அடைவீர்கள்.

    அது விரைவில் சாத்தியமாக என் வாழ்த் துகள்.

    பதிலளிநீக்கு
  2. இன்றைய நவீன கால விஞ்ஞானம் இன்னும் அணுவை கண்ணால் காணவில்லை அவர்கள் கூட அணுவின் இயக்கத்தை வைத்தே அணு என்ற ஒன்று இருப்பதாக கூறுகிறார்கள். மற்றப்படி அவர்கள் அணுவை இதுவைர கண்ணால் கண்டதில்லை...
    மேலும் விஞ்ஞானிகள் பலவாறான கோள்கள் நட்சத்திரங்கள் கிட்டத்தட்ட 1000 கணக்கு ஒளிவருடங்களுக்க அப்பால் உள்ளதாக சொல்கிறார்கள் அவர்கள் அதன் செயற்பாடுகளை உணருவதன் மூலம் தான் அவர்கள் அதனை நிறுவுகிறார்கள். அவர்கள் அவை எல்லாவற்றையும் கண்ணால் பார்த்துதான் நம்புவதென்றில்லை..இந்த வீடியோவை சற்று பாருங்கள்.
    http://www.youtube.com/watch?v=grSk-F0HogY&feature=plcp&context=C4c99495VDvjVQa1PpcFNqLCzA8bUs9fA5Mihzsg3cVwFFcg2Lnc0%3D

    பதிலளிநீக்கு
  3. Try this Video also
    http://www.youtube.com/watch?v=LkBXkB_mLCQ&feature=plcp&context=C4f0928eVDvjVQa1PpcFNqLCzA8bUs9XKM6tdal6Q_3u-WwtnpDOI%3D

    பதிலளிநீக்கு
  4. தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கண்டடைவீர்

    பதிலளிநீக்கு