செவ்வாய், 16 அக்டோபர், 2012

குமுதம், விற்பனையில் ’நம்பர்1’ ?

இரண்டாம் இடத்தில் விகடனா, குங்குமமா?

குமுதம், விகடன், குங்குமம் ஆகிய மூன்று முன்னணி வார இதழ்களுமே தத்தம் அட்டையில், ‘நம்பர் 1’ வார இதழ் என்று போட்டுப் பீத்திக் கொள்வதால், தமிழ் வாசகர் உலகம் நெருப்பாய்க் கொதித்துக் கொண்டிருக்கிறது!

”எனக்கே முதலிடம்” என்று இவர்கள் ‘டமாரம்’ அடிப்பதை நினைத்து அறிவு ஜீவிகள் சிரிப்பாய்ச் சிரிப்பார்களே என்ற உறுத்தல் இவர்களில் எவருக்குமே இல்லை.

மற்ற மொழிப் பத்திரிகைகள் எப்படி?

எல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தானோ?!

A B C [Audit Bureau of Circulation / பத்திரிகைகளைத் தணிக்கை செய்து, அவற்றின் விற்பனை பற்றிய புள்ளிவிவரங்களை வெளியிடும் நிறுவனம்] தரும் புள்ளிவிவரங்களை முழுமையாக வெளியிடும் நாகரிகமும் இவர்களிடம் இல்லை.

அப்புறம் எப்படி இந்த இதழ்களின் தர வரிசையைத்  தெரிந்து கொள்வது?

தமிழ் வார இதழ்களில் வெளியாகும் சிறுகதைகள் பற்றி, அடுத்தடுத்து நான் எழுதிய பதிவுகளுக்குக் கிடைத்த ‘பக்கப் பார்வைகளை’க் [ஹிட்ஸ்] கவனித்த போது, ஏதோ புரிவது போலிருந்தது.

குமுதம் இதழைக் கடுமையாகச் சாடி, ‘குமுதமே! திருந்து...திருத்து!’ என்னும் தலைப்பில் நான் வெளியிட்ட பதிவுக்கான ‘பார்வை’, முதல் நாளில் மட்டும் 1800 ஐக் கடந்தது; மறு நாளும் 1200 ஐத் தாண்டியது!

குமுதம் குறித்த மற்ற பதிவுகளுக்கும் 1500க்குக் குறையவில்லை.

இதே வேளையில், விகடன் கதைகள் குறித்த எந்தவொரு பதிவுக்கான  ஹிட்ஸும் 800 ஐத் தாண்டியதில்லை.

குங்குமம் பதிவுகளுக்கான ‘பார்வைகள்’ 500க்குள்.

கல்கியையும் பாக்கியாவையும் இணைத்து எழுதிய பதிவுக்கும் அதே எண்ணிக்கைதான்.

பிற தலைப்பிலான பதிவுகள் 300 ஐத் தாண்டுவதற்கே மூச்சுத் திணறின!

ஆக, என்னுடைய வலைத்தளப் பதிவுகளுக்கான ஹிட்ஸைக் கொண்டு இதழ்களின் விற்பனையைக் கணித்தால்..........

தமிழ் வார இதழ் உலகின் ‘முடி சூடா மன்னன்’ ஆகக் குமுதம் திகழ்வதை அறிய முடிகிறது!

குமுதத்திற்கு அடுத்த இடத்தில் விகடனும், அதற்கு அடுத்த இடத்தில் குங்குமமும் இருப்பதாகத் தெரிகிறது.

விற்பனையை வைத்து, இதழ்களை வரிசைப் படுத்துவதற்கு இன்னொரு வழிமுறையும் உண்டு. அது?

இதழில் இடம்பெறும் விளம்பரங்கள்.

கீழ் வரும் பட்டியலைக் கவனியுங்கள்.

குமுதம் [17.10.12]-----------------------26 பக்கம் [நிறுவனத்தின் பிற   பத்திரிகைகளுக்கான விளம்பரங்கள் நீங்கலாக]

விகடன் [17.10.12].......................11 பக்கம்

குங்குமம்[15.10.12].....................15    “

ராணி [  .09.12]..............................9    “

கல்கி [30.09.12].............................8   “

பாக்யா[செப்28-அக்04]...............  3   “

விளம்பரம் பெறுவதிலும் குமுதத்தின் சாதனையைப் பிற இதழ்கள் நெருங்கவே முடியவில்லை என்பதை இப்பட்டியல் புலப்படுத்துகிறது. [ஒரு இதழின் விற்பனையைக் கணக்கிட்டுத்தான் வணிக நிறுவனங்கள் விளம்பரம் தருகின்றன]

மிக அதிக ஹிட்ஸ், மிக அதிக விளம்பரம் பெறும் இதழ் என்ற வகையில், குமுதம் மட்டுமே தமிழ் வார இதழ்களில் ’நம்பர் 1’ தகுதியைப் பெற்றுள்ளது என்பதில் சந்தேகத்திற்கு இடமே இல்லை.

ஹிட்ஸ் பெறுவதில், குங்குமத்தை முந்திய விகடன், விளம்பரம் பெறுவதில் பிந்திவிட்டது.

உண்மையில், நெ.2 இடத்தைப் பெறுவது இந்த இரண்டில் எது என்பதை அறிய, மேற் சொன்ன இரண்டு ‘வழி’கள் போதா என்பது தெரிகிறது.

ராணியும் கல்கியும் சம அளவில் விளம்பரம் பெறுகின்றன எனினும் [ராணியில் விளம்பரங்கள் சீரான எண்ணிக்கையில் உள்ளன. கல்கியின் சில இதழ்களில் மிகக் குறைந்து காணப்படுகின்றன]..........................

ராணி, பட்டிதொட்டிகளில்கூடக் கிடைக்கிறது; கல்கி, நகர்ப்புறங்களில், குறிப்பிட்ட சில கடைகளில் மட்டுமே கிடைக்கிறது என்பதைப் பார்க்கும் போது, விற்பனையில் 4 ஆவது இடம் ராணிக்கே என்று உறுதியாகச் சொல்லலாம்.

பாக்யாவில், விளம்பரங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு எனினும், அதிக எண்ணிக்கையிலான கடைகளில் அது விற்பனைக்குத் தொங்கவிடப்பட்டுள்ளதைக் காணும்போது, அதுவும் கல்கியை மிஞ்சிவிட்டது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

எது எப்படியோ, மற்ற இதழ்களை வரிசைப் படுத்துவதில் தெளிவற்ற நிலை இருந்தாலும்....................

தமிழ் வார இதழ்களில் ’நம்பர் 1’ இடம் குமுதத்துக்கே என்று தயங்காமல் தமுக்கடித்துச் சொல்லலாம்!

=========================================================================================================================

குறிப்பு
: ’நம்பர் 1’ குமுதத்துக்கு ஜால்ரா போட்டுத் தமிழ்மணம் 'சூடான இடுகை’ வரிசையில் முதலிடம் பிடிக்கலாம் என்னும் ஆசையெல்லாம் இந்த ‘அறுவை’க்கு இல்லை. நம்புங்கள்.

=========================================================================================================================















7 கருத்துகள்:

  1. உங்கள் குறிப்பை நம்பி விட்டேன்...உங்கள் பதிவின் ஹிட்சை வைத்து நீங்கள் கணித்து இருப்பது ஓகே...ஆனால் குமுதத்தின் இந்த இடத்துக்கு அது 10 ரூபாயிலும் ,விகடன் 17 ரூபாயிலும் விற்கப்படுவதும் ஒரு காரணம்....விகடனின் பக்கம் அதிகமாக இருந்தாலும் கூட !

    பதிலளிநீக்கு
  2. நன்றி மைதீன்.

    நீங்கள் சொல்வது போல், விலையும் ஒரு காரணம் என்பது உண்மை. விலை அதிகம் என்பதால் விற்பனை குறைந்தாலும் விகடனுக்கு லாபம் குறையாதோ?

    கணக்குப் பார்க்காமலா விகடன் விலையைக் கூட்டும்?

    மீண்டும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  3. நண்பர் மைதீன்,

    நான் தந்திருக்கும் விளம்பரங்களின் எண்ணிக்கை பக்க அளவில் கணக்கிடப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. பட்டியைலப் பார்த்து வியந்தேன்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  5. //பட்டியலைப் பார்த்து வியந்தேன்?//

    நன்றி மறவேன் தனபாலன்.

    பதிலளிநீக்கு