குமுதத்தில் என்[’பசி’பரமசிவம்] கதைகள்!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, நான் எழுதிய இரண்டு ஒரு பக்கக் கதைகள் ‘குமுதம்’ இதழில் வெளியாகியுள்ளன.
குமுதம்: 24.10.2012.
கதை: பட்டாசு [ப.பரமசிவம்]
“புள்ளைகளுக்குப் பட்டாசு வாங்கணும்.ரூபா குடு” என்றான் முருகேசன். அவனை முறைத்த மரகதம், ”குடுக்கிற பணத்தைக் குடிச்சே தீர்த்துடுவே. உன் வேலையைப் பாரு” என்றாள்.
வெளியே தட்டாம்பூச்சி பிடித்துக் கொண்டிருந்த மகன் ராசுவிடம், “அம்மாகிட்டே பணம் வாங்கி வா. பட்டாசு வாங்கப் போகலாம்” என்றான்.
“பட்டாசு வேண்டாம்” என்றான் ராசு.
“ஏண்டா?”
போன வருசம் தீபாவளி அன்னிக்கு நீ குடிச்சிட்டு வந்து அம்மா மண்டையை உடைச்சுட்டே. அது ஆஸ்பத்திரியில் இருந்துச்சு. நாம தீபாவளி கொண்டாடல. போன வருசம் வாங்கின பழைய பட்டாசு அப்படியே இருக்கு” என்றான் ராசு.
அதிர்ச்சியடைந்த முருகேசன், நீண்ட நேர யோசனையில் ஆழ்ந்தான்.முதன் முறையாக, ‘இனி குடிப்பதில்லை’ என உறுதிமொழி எடுத்துக்கொண்டான்.
* * *
குமுதம்: 12.09.2012
கதை: அப்பா [நாமக்கல் பரமசிவம்]
”அப்பா, சீனுவோட அப்பா கார் வாங்கியிருக்கார்” என்றான் பரணி.
“எந்தச் சீனுடா?” சும்மா கேட்டு வைத்தான் மாதவன்.
“என் கிளாஸ்மேட்பா. புதுக் கார்ல கோயிலுக்குப் போனாங்களாம். ரொம்ப ஜாலியா இருந்துச்சுன்னு சீனு சொன்னான். நீயும் ஒரு கார் வாங்குப்பா.”
“வாங்கலாம்”
“நாளைக்கே வாங்கணும்.”
மகனை இழுத்து அணைத்துச் சொன்னான் மாதவன். “கார் வாங்க நிறையப் பணம் வேணும். இன்னும் அஞ்சு வருசத்தில் சம்பாதிச்சுடுவேன். நீ ஹைஸ்கூல் போகும் போது உன்னைக் காரில் கொண்டு வந்து விடுவேன். சமத்துப் புள்ளையா விளையாடிட்டு வா.”
“நம்ம ரெண்டு பேருமே அத்தக் கூலி. அஞ்சு வருசத்தில் கார் வாங்கிடுவேன்னு
குழந்தைகிட்டே எதுக்குப் பொய் சொன்னீங்க?” மாதவனின் மனைவி கேட்டாள்.
“இப்போ அவனுக்கு அஞ்சு வயசு. அஞ்சு வருசம் போனா நம்ம பொருளாதார நிலைமை அவனுக்குப் புரிய ஆரம்பிச்சுடும். அந்தப் பிஞ்சு மனசுல இப்பவே கஷ்டங்களைத் திணிக்க வேண்டாம்.”
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
குறிப்பு:
இப்பதிவுக்கு நான் எதிர்பார்க்கும் பின்னூட்டமும், அதற்கான என் பதிலும்.....
“உன்னோட ரெண்டு கதை வெளியிட்டதால, குமுதம் ‘தரத்திலும் நம்பர் 1’ன்னா ஒசந்திடிச்சா?”
“அது வந்துங்க.....ஹி...ஹி...ஹி...”
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
முக்கிய குறிப்பு:
நாளைய [06-11-2012] பதிவின் தலைப்பு..............
‘காதலா, காமமா?’
படிக்கத் தவறாதீர்!

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
பதிலளிநீக்குhttp://otti.makkalsanthai.com
பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,
குமுதத்தில் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதொழிற்களம் குழுவினருக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
பதிலளிநீக்குமனமுவந்த நன்றி.
நல்ல பதிவு என் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு//நல்ல பதிவு.என் வாழ்த்துக்கள்//-மாற்றுப்பார்வை.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
வாழ்த்துக்கள் பரமசிவம்.கலக்குங்கள்.
பதிலளிநீக்குஅடிக்கடி பேரை மாற்றுகிறீர்களே.அதைத் தவிர்த்தல் நலம்.
நன்றி முரளிதரன்.
பதிலளிநீக்குஇனியும் பேரை மாற்ற மாட்டேன்.