'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Monday, November 9, 2015

குதிரை...சேணம்...கழுதை! [14 வரிக் கதை]]

இந்தக் கசப்பான கதையைப் படிச்சிட்டுத் தீபாவளி இனிப்பைச் சாப்பிடுங்க. ரொம்பவே சுவைக்கும்!

“வர்றேம்மா...” புறப்படப்போன வேலைக்காரி தங்கம்மா தயங்கி நின்றாள்.

“என்ன தங்கம்மா?” முதலாளியம்மா கேட்டாள்.

“என் மகன் முத்துவோட உடுப்பெல்லாம் கிழிஞ்சிடிச்சி. புதுசு எடுக்கணும். ரெண்டாயிரம் ரூபா குடுங்க. மாசா மாசம் சம்பளத்தில் பிடிச்சுக்குங்க.”

“முத்துக்கு என்ன வயசு?”

“பத்து நடப்புங்க.”

“சொல்றேன்னு தப்பா நினைச்சுடாதே” என்ற பீடிகையுடன் தொடர்ந்தார் முதலாளியம்மா, “எங்க யுவனுக்கு முத்து வயசுதான். அவன் போட்டுக் கழிச்ச பழைய டிரஸ் நிறைய இருக்கு. கொஞ்சம் செட் தர்றேன். முத்து உடுத்துக்கலாம். தரட்டுமா?”

மீண்டும் தயக்கத்திற்குள்ளான தங்கம்மா, “நீங்க சாப்பிடுறதில் மீந்துபோனதை எங்க வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் நாங்க எல்லோரும் சாப்பிடுறோம். அது மாதிரி இது இல்லீங்க. நீங்க உடுத்துறது உயர்ந்த ரகத் துணி. நாங்க உடுத்துறது மட்ட ரகம். உங்க உயர்ந்த ரகத் துணிகளை நாங்க போட்டுகிட்டா, அது குதிரைக்குப் போடுற சேணத்தைக் கழுதைக்குப் போட்ட மாதிரி இருக்கும். என்னை மன்னிச்சுடுங்கம்மா. துணி வேண்டாம். பணம் மட்டும் குடுங்க போதும்” என்றாள்.
=============================================================================================

No comments :

Post a Comment