மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மனித நேயத்தை ஊட்டி வளர்த்தால்...சாதி, மதம், கடவுள் ஆகியவற்றின் தேவை முற்றிலும் ஒழியும்.

Tuesday, February 21, 2017

தமிழ்மணம் தானியங்கி எந்திரம் பழுது பார்க்கப்படுமா?

மற்ற பதிவர்கள் எப்படியோ, என்னைப் பொருத்தவரை தமிழ்மணத்தின் மீதான என் நம்பிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணங்கள்.....
* முகப்புப் பக்கத்தில் தோன்றும் பதிவுகளுக்கான பட்டியல் மிகப் பல மணி நேரங்கள் நகர்வதே இல்லை.

இணைக்கும் பதிவுகளை[இடுகைகள்]த் தமிழ்மணம் இணைத்துக்கொண்டதாக அறிவித்த பின்னரும் அவற்றில் கணிசமானவை முகப்புப் பக்கப் பட்டியலில் இடம்பெறுவதில்லை.

* தலைப்பைத் திருத்தி மீண்டும் இணைத்தாலும் பெரும்பாலும் பயன் கிட்டுவதில்லை.

* எதிர்பாராத வகையில் திடுதிப்பென்று பட்டியல் வெகு வேகமாக நகர்ந்துவிடுகிறது. அதன் விளைவாக, என் இடுகைக்கு முகப்புப் பக்கத்தில் தோன்றும் வாய்ப்பு பறிபோகிறது. அது எந்தப் பக்கத்தில் போய் நிற்கிறது என்பதைப் பக்கம் பக்கமாகத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

* ஒன்றன்பின் ஒன்றாகப் பதிவுகளை இணைத்துக்கொண்டே இருக்கும் பதிவர்களுக்குப் பிரச்சினை இல்லை. அவர்களின் சில இடுகைகளேனும் முகப்பில் இடம்பெற்றுவிடுகின்றன. நானோ தொடர்ந்து எழுதுவதில்லை. பெரும்பாலும் ஐந்தாறு நாட்களுக்கு ஒரு முறைதான் எழுதுகிறேன்.

* என் பதிவுகள்  கணிசமானவை  முதல் பத்து சூடான இடுகைப் பட்டியலை எட்டினாலும் அவை முகப்புப் பக்கத்தில் தோன்றுவதில்லை.

* இணைக்கப்பட்ட இடுகை முகப்பில் இடம்பெறாவிட்டால் பார்வையாளர் எண்ணிக்கை மிகவும் குறைகிறது. இது யாவரும் அறிந்ததே.

* தமிழ்மணம் ஓட்டுப் பட்டையிலும் பழுது உள்ளது. கிளிக் செய்துவிட்டு, ‘உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது. நன்றி’ என்ற அறிவிப்பைப் பெறுவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. சில நேரங்களில் நிமிடக் கணக்கில்.

* ஒரு பக்கத்திலிருந்து அடுத்த பக்கத்தை அடைவதற்கும் பெரும்பாலும் நீண்ட நேரம் ஆகிறது. சில நேரம் அது சாத்தியப்படுவதே இல்லை.

* இக்குறைகள் களையப்படாதவரை தமிழ்மணம் இணைப்பைப் பெறுவதால் பயன் ஏதுமில்லை என்பது என் எண்ணம். 

* இந்த இடுகையும்கூடப் பின்னுக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. வழக்கமாக வருகை புரியும் நண்பர்கள் என் வலைப்பக்கத்தில் இதை வாசித்தறியலாம்.

* நன்றி.
==============================================================================

8 comments :

 1. கிட்டத்தட்ட ஒரு வருடமாக செயல்படவில்லை...

  அதையும் மீறி நம் வலைப்பதிவர்கள் (Incl. Tamilmanam Rank - Side Gadget) "இத்தனையாவது இடம்" என்று சொல்லிக் கொள்வது - சின்ன அம்மா போல...! சுருக்கமாக - தமிழ்மண நிர்வாகம் இன்றைய அரசியல் போல ஆகி விட்டது....

  ReplyDelete
  Replies
  1. மாலை 06.15க்கு இணைக்கப்பட்ட இந்த இடுகை இந்த வினாடிவரை தமிழ்மணத்தின் இடுகைப் பட்டியலில் இடம்பெறவில்லை. நீங்கள் சொல்வது போல, தமிழ்மணம் நிர்வாகத்திலும் அரசியல் புகுந்துவிட்டதாகத் தெரிகிறது.

   நன்றி தனபாலன்.

   Delete
 2. தமிழ்மணம் செயலிழந்தது
  உண்மை தான் - ஆனால்
  அதற்கு ஈடாக
  எதுவும் உருவாகாதது
  பதிவுலகிற்குப் பாதிப்பே!

  ReplyDelete
 3. தமிழ்மண நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள் ,திரட்டியை நடத்த விருப்பம் இல்லையெனில் தமிழ் ஆர்வலர்கள் வசம் ஒப்படைத்து விடலாமே?ஏன் எந்த பதிலும் சொல்வதில்லையோ:)

  ReplyDelete
  Replies
  1. காத்திருப்போம் பகவான்ஜி. நன்றி.

   Delete
 4. நான் எனது ப்ளாக் பதிவு செய்தது 23-10-2016 இது வரை எண்த அறிவித்தலும் இல்லய்
  www.tamilitwep.com

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் எதையும் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.

   நன்றி நண்பரே.

   Delete