ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, பக்தியின் பெயரால் தமிழர் மனங்களில் மூடநம்பிக்கைகளைத் திணித்து, கடவுளின் பிரதிநிதிகளாகத் தம்மை நிலைநிறுத்திச் சுக வாழ்வு வாழ்ந்தது ஒரு கூட்டம்/கும்பல்.
பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்புப் பரப்புரை இந்த வந்தேறிகளின் முகத்திரையைக் கிழித்ததோடு தமிழர்களைத் தன்மானம் மிக்கவர்களாகவும் வாழவைத்தது. இது அண்மைக்கால வரலாறு.
ஆத்திகம், அரசியல் என்று பல்வேறு துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய, சூட்சும புத்தியுடைய இந்தக் கும்பல், பெரியாரின் புகழைச் சிதைக்கவும் தங்களின் இழந்த கௌரவத்தை மீட்டெடுக்கவும் தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது.
பெரியாரின் தன்னலமற்ற பகுத்தறிவுச் சிந்தனைகளால், சிந்திக்கக் கற்று, மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட்டுவந்த தமிழர்கள், அவரின் மறைவுக்குப் பின்னர், அவரின் கொள்கைகளைப் போற்றி வளர்க்கப் போதிய தலைவர்கள் வாய்க்காத காரணத்தால் மீண்டும் காட்டுமிராண்டிகளாக மாறத் தொடங்கினார்கள்.
தமிழர்களின் இத்தகையதொரு மாற்றத்தைத்தான் இந்தக் கூட்டத்தினர் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
தக்க சூழ்நிலை வாய்க்கவே, தாங்கள் இட்டுக்கட்டிய ஆன்மிகக் கதைகளைத் தமிழர்களிடையே பரப்புவதில் தீவிரம் காட்டினார்கள். தமிழில் வெளிவரும் மிகப் பல தினசரிகளும் பருவ இதழ்களும் இவர்களுக்குத் துணை நின்றன; நிற்கின்றன. இதன் விளைவு.....
தமிழகத்தில் பகுத்தறிவாளர்களின் எண்ணிக்கை சரிந்து, மூடத்தனங்களைச் சுமந்து திரியும் மூடர்களின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்தது; அதிகரிக்கிறது.
இந்தச் சூழ்நிலைதான், எச்சி ராஜா என்று பெயர்கொண்ட ஒரு நபரை, வெறி பிடித்த தெரு நாயைப் போல் நாடெங்கும் குரைத்துக்கொண்டு திரிய வைத்திருக்கிறது; பெரியாரை இழிவுபடுத்தியதற்கு மன்னிப்புக் கேட்காமல், வருந்துவதாக மழுப்பிவிட்டுப் பெரியாரவர்கள் தமிழை மேம்படுத்துவதற்காகச் சொன்ன கருத்துகளைத் திரித்து, அவர் தமிழை இழிவுபடுத்தியதாகப் பொய் சொல்லி அலைய வைத்திருக்கிறது.
உண்மையில், தந்திர புத்தியும் குயுக்தியும் நிறைந்த இந்தக் கும்பலுக்குத் தலைமை தாங்கும் தகுதியுடைய ஆளல்ல இந்த நபர். ஒரு சேவகன் மட்டுமே. இந்த ஆளை இயக்குவது, தமிழனைத் தன்மானம் இழக்கச் செய்வதற்காக முனைப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் இந்தக் கும்பல்தான். பரம்பரை பரம்பரையாய்க் கல்வி கற்பதை மட்டுமே குலத்தொழிலாகக்[கோயில்களில் மணியடிப்பது, மந்திரம் சொல்வதெல்லாம் துணைத் தொழில்] கொண்டவர்கள் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள். நாட்டை ஆளும் அரசியல்வாதிகளின் நிரந்தர ஆதரவு இவர்களுக்கு எப்போதும் உண்டு. தமிழர்கள் இவர்களை முற்றிலுமாய்ப் புரிந்துகொள்ளுதல் இன்றைய காலத்தின் கட்டாயம்.
ஜாதி, மதம், கட்சி போன்ற அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, சுயநலப்போக்கைக் கைவிட்டுத் தமிழர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
தமிழர்கள் இணைவார்களா? அஞ்சாமையுடன் செயல்படுவார்களா?
***************************************************************************************************************