ஞாயிறு, 10 ஜூன், 2018

வாருங்கள்...நாமும் 'சத்குரு' ஆகலாம்!!!

சத்குரு ஜக்கி வாசுதேவின் ஒரு தத்துவப் பதிவை அண்மையில் அவரின் வலைத்தளத்தில்https://isha.sadhguru.org/in/ta/.../sakthireethiyaga-undagum-uravu-eppadippattathu நுழைந்து படிக்க நேர்ந்தது. வரிக்கு வரி மனிதர் குழப்புகிறார். படியுங்கள். குறுக்கீடு செய்யாமல் பதிவின் இறுதியில் என் பித்துக்குளித்தனமான கேள்விகளை[வண்ணம் தீட்டியிருக்கிறேன்]ப் பட்டியலிடுகிறேன். 
சக்திரீதியான உறவுமுறை என்பதன் அர்த்தம் என்ன?, Sakthireethiyana uravumurai enbathan artham enna?
'மக்களுடன் உங்களுக்கு இருக்கும் உறவுமுறை என்பது உடல் ரீதியானதாகவோ, மன ரீதியானதாகவோ, உணர்ச்சி ரீதியானதாகவோ இருக்கிறது' உங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் சம்பந்தப்படாத சக்தி ரீதியான உடலுடன் உங்களுக்கு ஒரு கணம் தொடர்பு ஏற்படுமேயானால், உங்களுடைய வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமான முறையில் நடைபெறத் துவங்குகிறது.

எனவே, உங்கள் உறவுமுறை என்பது இந்த மூன்று அம்சங்களின் கூட்டாகத்தான் இருக்கக்கூடும். சிலவற்றில் மன ரீதியான அம்சம் அதிகமாக இருக்கலாம், சிலவற்றில் உணர்ச்சியின் ஆதிக்கம் இருக்கலாம், சிலவற்றில் உடல் ஆதிக்கம் இருக்கலாம். ஆனால் இந்த மூன்றும் எங்கோ ஓர் இடத்தில் சம்பந்தப்படுகின்றன. எனவே உங்கள் உறவுமுறை எப்படிப்பட்டதாக இருந்தாலும், உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்ச்சி ரீதியாக அவை எந்த நிலையில் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட கட்டத்தைத் தாண்டி செல்ல முடியாது. இவை நல்வாழ்வுக்காகவும், சௌகரியத்துக்காகவும் உள்ளன. வாழ்க்கையில் நாம் செய்கின்ற எல்லாவற்றிலும் பங்குதாரர்களைக் கொண்டிருக்கிறோம். நீங்கள் தொழிலைத் தேடிச் சென்றால் ஒரு விதமான பங்குதாரர்களைத் தேடுகிறீர்கள். வீட்டில் நம்மோடு இருப்பதற்கு வேறுவிதமான பங்குதாரரைத் தேடுவீர்கள். மற்றொன்றுக்கு, அதற்கேற்றவாறு பங்குதாரரைத் தேடுவீர்கள். எனவே ஒவ்வொருவிதமான உறவுக்கும் ஒவ்வொருவிதமான பங்குதாரர்களை நீங்கள் தேடுகிறீர்கள்.

சக்தி அடிப்படையில் என்று சொல்லும்போது அது இந்த மூன்று விஷயங்களுக்கும் சம்பந்தப்பட்டது அல்ல. உங்களுடைய எண்ணம், உங்களுடைய உணர்ச்சி, உங்களுடைய உடல் இந்த மூன்றிலும் எதற்குமே இந்தப் பரிமாணங்களில் இடம் இல்லை. நீங்கள் ஒருவருடன் அமர்ந்திருக்கும்போது, உங்கள் உடல், மனம், உங்கள் உணர்ச்சிகள் கடந்த ஏதோ ஒன்று துடிப்புடன் செயல்படத் தொடங்குகிறது. நீங்கள் இதுவரை கற்பனையும் செய்திராத விதத்தில் அது நடக்கத் தொடங்குகிறது.
இப்போது பலரும் நம்மிடம் வந்து இந்த யோகாவில் அமர்ந்த சிறிது நேரத்தில், இந்த நோய் போய்விட்டது, அந்த நோய் போய்விட்டது என்று சொல்வார்கள். இவையெல்லாம் நடப்பது ஏன் என்றால், யாரோ ஒருவர் இங்கே அமர்ந்துகொண்டு அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்பதால் அல்ல.
உங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் சம்பந்தப்படாத சக்திரீதியான உடலுடன் உங்களுக்கு ஒரு கணம் தொடர்பு ஏற்படுமேயானால், உங்களுடைய வாழ்க்கை முற்றிலும் வித்தியாசமான முறையில் நடைபெறத் துவங்குகிறது. தீட்சை என்பதன் அடிப்படை என்னவென்றால் ஒரு மனிதனை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ இல்லாமல் சக்தி ரீதியாக நீங்கள் தொடுகிறீர்கள்.
ஆனால், உங்கள் மனதையும், உங்கள் உடலையும், ஓரளவுக்கு உங்கள் உணர்ச்சியையும் ஈர்க்காவிடில், உங்களைத் தொடுவது என்ற கேள்வி எழுவதற்கே வாய்ப்பில்லை. எனவே ஒரு குரு சிஷ்ய உறவு முறையில் வேறு எவராலும் தொடப்பட முடியாத பரிமாணத்தை சக்தி ரீதியில் நாம் செய்கிறோம். வேறு ஒருவராலும் தொடப்பட முடியாத இடம் அது. 

சத்குருவின் போதனை முடிந்தது. இனி நம் கேள்விகள்.....

*//உங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் சம்பந்தப்படாத சக்தி ரீதியான உடலுடன் உங்களுக்கு ஒரு கணம் தொடர்பு ஏற்படுமேயானால்...//
'உடலோடு சம்பந்தப்படாத...' என்று சொல்லிவிட்டு, 'சக்தி ரீதியான உடல்'னு சொல்றாரே, அது என்னங்க சக்தி ரீதியான உடல்?

*//சிலவற்றில் மன ரீதியான அம்சம் அதிகமாக இருக்கலாம், சிலவற்றில் உணர்ச்சியின் ஆதிக்கம் இருக்கலாம், சிலவற்றில் உடல் ஆதிக்கம் இருக்கலாம். ஆனால் இந்த மூன்றும் எங்கோ ஓர் இடத்தில் சம்பந்தப்படுகின்றன//
எங்கோ ஓரிடம்னு சொல்றாரே, அந்த எங்கோ ஓரிடம் எங்கே இருக்கு?

*//நீங்கள் ஒருவருடன் அமர்ந்திருக்கும்போது, உங்கள் உடல், மனம், உங்கள் உணர்ச்சிகள் கடந்த ஏதோ ஒன்று துடிப்புடன் செயல்படத் தொடங்குகிறது//
மேலே சொன்ன 'எங்கோ ஓரிடம்' என்பது போல்தான் இதுவும்; அது என்ன ஏதோ ஒன்று?

*//யாரோ ஒருவர் இங்கே அமர்ந்துகொண்டு அற்புதங்களை நிகழ்த்துகிறார் என்பதால் அல்ல//
வெளிப்படையா நான் நிகழ்த்துலேன்னு சொல்ல வேண்டியதுதானே?

*//தீட்சை என்பதன் அடிப்படை என்னவென்றால் ஒரு மனிதனை உடல்ரீதியாகவோ, மனரீதியாகவோ, உணர்ச்சி ரீதியாகவோ இல்லாமல் சக்தி ரீதியாக நீங்கள் தொடுகிறீர்கள்//
மேற்கண்ட மூன்றின் ரீதியாக அல்லாமல், சக்தி ரீதியாக[உடம்பின் சக்தியை மூளையில் சுமந்துகொண்டு], அதாவது, ஏதோ அதீத சக்தி இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு[நானும் குழம்பி உங்களையும் குழப்புகிறேன்!!], என் பெண்டாட்டி பிள்ளைகளையும் பேரன் பேத்திகளையும் தொட்டுத் தொட்டுத் தொட்டுப் பார்த்தேன். ஒரு வித்தியாசமும் தெரியலீங்க.

*//ஆனால், உங்கள் மனதையும், உங்கள் உடலையும், ஓரளவுக்கு உங்கள் உணர்ச்சியையும் ஈர்க்காவிடில், உங்களைத் தொடுவது என்ற கேள்வி எழுவதற்கே வாய்ப்பில்லை//
அந்த மூனுக்கும் சக்தி ரீதியாத் தொடுறதுக்கும் சம்பந்தம் இல்லேன்னு சொன்னவர் இப்போது, மூன்றையும் ஈர்க்காவிடில் தொடுவது வாய்ப்பில்லை என்கிறாரே, ஏன் இந்த முரண்பாடு?

சத்குருவின் இந்தப் போதனையைப் பலமுறை படிச்சேன். இருக்கிற கொஞ்சூண்டு மூளையைக் கசக்கோ கசக்குன்னு கசக்கிப் பார்த்தேன். ஒன்னுமே புரியல.

உங்களுக்குப் புரியுதா பாருங்க. புரிஞ்சா.....

ஆனந்தவிகடன் மாதிரியான பத்திரிகையில், அதன் ஆசிரியரை வசியம் பண்ணி அஞ்சாறு போதனைக் கட்டுரைகள் எழுதுங்க. ஜக்கி போலவே பிரபல ஆன்மிக போதகர் ஆயிடலாம். மாறாக.....

இந்த என் பதிவு அபத்தமானதுன்னு நினைச்சா என்னைக் கண்டிச்சி எழுதுங்க...தயங்காம எழுதுங்க.

நன்றிங்க.
========================================================================== 


15 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிவது மாதிரியும் சொல்லி, அதை புரிந்து கொள்ள விடாமல் குழப்புவதில்தான் மதபோதகர்களின் வாய்ச்சொல் வீரம் அடங்கி இருக்கிறது நண்பரே...

      நீக்கு
    2. வாய்ச்சொல்லில் வீரர்கள்தான். நம் மக்கள் அப்பாவிகள். அவர்கள் சொன்னதைச் சொல்கிறார்கள். ஆட்டுவித்தபடி எல்லாம் ஆடுகிறார்கள். காலமெல்லாம் ஆன்மிகர்கள் காட்டில் அடைமழை.

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  2. சத்குருவையே சந்தித்து விளக்கம் கேட்கலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல யோசனைதான். வாய்ப்புக் கிடைத்தால் சந்தித்துப் பேசுவேன்.

      நன்றி புதுமுகன்.

      நீக்கு
  3. முட்டாள்த்தனத்தின் உச்சகட்டம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவருடைய கருத்துரையைத்தானே சொல்றீங்க?

      நன்றி yaso.

      நீக்கு
  4. ஆஆஆஆஆஆ மீயும் சற்குருவோடு இணையப்போகிறேன்ன்ன்:) அவர் நல்ல விசயங்களும்ம்ம்ம் சொல்றார் அறிவுப்பசி ஜி:)).. அன்னம் போல வாழப் பழகுங்கோ.. பாலை மட்டுமே புறிச்சுப் பருகுங்கோ:)) ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா இணையப்போகும்போது நானும் வர்றேன். வெள்ளியங்கிரிச் சாமியாரை உண்டு இல்லைன்னு பண்ணிடுவோம்.

      //நல்ல விசயங்களும்ம்ம்ம் சொல்றார் அறிவுப்பசி//
      அதிரா சொன்னா சரியாத்தான் இருக்கும். என் ஊனக்கண்ணுக்கு எதுவும் தென்படாம போச்சு. கண்டுபிடிச்சி எழுதறேன்.

      நீக்கு
  5. ///இந்த என் பதிவு அபத்தமானதுன்னு நினைச்சா என்னைக் கண்டிச்சி எழுதுங்க...தயங்காம எழுதுங்க.
    //
    அவசரத்தில் கண்ணடிச்சு எனப் படிச்சிட்டேன் ஹையோ ஹையோ:)).. உங்களை ஒருநாளைக்கு அவரின் யோகா வகுப்புக்கு அனுப்போணும்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அவசரத்தில் கண்ணடிச்சு எனப் படிச்சிட்டேன்...//
      நானும் அவசரத்தில், 'கண்ணடிச்சி' என்பதைக் 'கன்னத்தில் அடிச்சி'ன்னு படிச்சிட்டேன். அதிரா அடிச்சா வலிக்காதுதானே!

      //உங்களை ஒருநாளைக்கு அவரின் யோகா வகுப்புக்கு அனுப்போணும்:))//

      நான் தயார். எதுக்கும் என்னை மாதிரி அறிவுஜீவி[!!!]களுக்கெல்லாம் யோகா கத்துத் தருவாரான்னு சத்குருவைக் கேட்டுக்கிறது நல்லது.

      நன்றி அரதிரா.

      நீக்கு
    2. நன்றி அரதிரா > நன்றி அதிரா.

      நீக்கு
    3. //அரதிரா//

      ஹா ஹா ஹா அறிவுப்பசிஜி க்கும் டங்கு ஸ்லிப்பாகுதூஊஊஊஊஊ:))

      நீக்கு
  6. இப்படி எல்லாம் கேள்விகள் கேட்டா சத்குருவிற்கு பிடிக்காது அதனால பதில் கிடைக்காது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மைப் போன்ற சாமானியர்களைச் சந்திக்கவே மாட்டார். அப்புறம் எங்கே கேள்விகள் கேட்பது?

      நன்றி தமிழன்.

      நீக்கு