Friday, June 8, 2018

காமயுகம்!!!

காம வேட்கை மிக்கவர்கள் காமுகர்கள். உலக அளவில்  அன்று முதல் இன்றுவரை பெருமளவில் காமுகர்கள் இருந்திருக்கிறார்கள். காமுகர்கள் இருந்த அளவுக்குக் 'காமுகி'கள் இருந்தார்களா தெரியவில்லை. இருந்திருந்தால், 'காமுகி' என்னும் சொல்லும் பயன்பாட்டில் மிகுதியாக இருந்திருக்கும்.

கடந்த காலங்களில் எப்படியோ இனி எதிர்காலத்தில் காமுகன் என்னும் சொல்லுக்கு நிகராகக் காமுகி என்னும் சொல்வழக்கும் நிலைபெறும் என்றே தோன்றுகிறது. காரணம், காம இச்சையைக் கட்டுப்படுத்தி வாழும் நோக்கம் சிறிதுமின்றி மனம்போன போக்கில் வாழும் பெண்களை[ஆண்களைப் போலவே] நிறையவே காண முடிகிறது[ஆதாரம்: ஊடகச் செய்திகள்].

கழுத்தில் தாலி ஏறிய சூட்டோடு ஏற்கனவே காம சுகம் தந்தவனுடன் காணாமல் போகிறார்கள். கள்ள உறவுக்குத் தடையாக இருந்தால் காதலனுடன் சேர்ந்து கணவனையே கழுத்தை நெறித்துக் கொல்கிறார்கள். கையில் காசுபணம் இருந்தால் அடியாட்களைத் தேடுகிறார்கள். பாலூட்டும் குழந்தைகளை மட்டுமல்ல, பருவம் எய்திய பிள்ளைகளைத் துறந்தும் 'உடன்போக்கு' நிகழ்த்துகிறார்கள். இவர்களுள் படித்தவர், படிக்காதவர் என்னும் வேறுபாடெல்லாம் அதிகம் இல்லை.

இம்மாதிரியான அண்மைக்கால நிகழ்வுகளைச் சேகரித்தால் அது குறித்த பட்டியல் மிக நீளும்.

கள்ள உறவுக்கு முன்னால் பிள்ளைப்பாசம், குடும்பப்பற்று, மதிப்பு, மானம், மரியாதை என்று எவையெல்லாம் கவுரவமான வாழ்க்கைக்குத் தேவையோ அவையெல்லாம் காணாமல் போகின்றன.

சில நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம் [காலைக்கதிர், 07.06.2018. மற்ற விவரங்கள் வேண்டாம்]

அந்தப் பெண்ணுக்கு வயது 45. கணவன் தரும் கட்டில் சுகம் கட்டுபடி ஆகவில்லை. 21 வயதே ஆன கட்டிளம் காளை ஒருவனுடன் கட்டுப்பாடில்லாமல் கள்ள உறவு கொள்கிறாள். காலக்கணக்கெல்லாம் இல்லாமல் உறவு தொடர்கிறது. 

ஆசைக்கு எல்லை ஏது? 45 வயதான ஆசைநாயகியின் 15 வயதே ஆன சிறுமியையும் அனுபவிக்கத் திட்டமிடுகிறான் காதகன். ஆசைநாயகியிடம் மனம் திறக்கிறான். தன்னைக் கைகழுவிவிடுவானோ என்று அஞ்சினாளோ என்னவோ, 45 வயதான அந்த நடுத்தர வயதுச் சிறுக்கி, தன் மகள் என்றும் பாராமல், அவளின் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துக் காமக்கிராதகனுக்கு மணம் செய்து வைக்கிறாள்.

சின்னஞ்சிறு வயதில் அவள் ஒரு பிள்ளைக்குத் தாயும் ஆகிறாள்.

தாய்மை நிலையை எய்திய பிறகுதான், சிறுமிக்குத் தன் தாயின் கள்ள உறவு தொடர்வது உள்மனதை உறுத்துகிறது. இருவரையும் கண்டிக்கிறாள். விளைவு.....

இருவரும் சேர்ந்து இவளைத் அடித்தும் உதைத்தும் துன்புறுத்துகிறார்கள்.

பொறுத்தது போதும் என்று முடிவுகட்டிய சிறுமி காவல் நிலையத்தில் புகார் செய்கிறாள்.

நடுத்தர வயதுக் காமுகியையும், காமுகனையும் கைது செய்து விசாரித்துக்கொண்டிருக்கிறது காவல்துறை.

''காமம் பொல்லாதது'' என்று யாரோ ஓர் அனுபவசாலி சொல்லிவிட்டுப்போன புன்மொழி நினைவுக்கு வருகிறது. ''காமம் மிக நல்லது'' என்று சொல்லும் காலமும் வருமா? எப்போது?
========================================================================
இச்சம்பவம் குறித்து இன்று வேறொரு பதிவு எழுதப்பட்டுள்ளது[சற்று முன்னர்தான் கவனித்தேன்]. எனினும், என்னுடைய இந்தப் பதிவு விமர்சன நோக்கில் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
''

6 comments :

 1. காமம் கண்ணை மறைக்கும் என்பர். உறவின் முறைகளையும் மறக்குமா ?

  ReplyDelete
  Replies
  1. மறக்க வைப்பது மட்டுமல்ல, குடும்ப உறவுகளைச் சீரழிக்கவும் செய்யும் என்பதற்கு இச்சம்பவமே எடுத்துக்காட்டு.

   நன்றி நண்பரே.

   Delete
 2. சீரழிவிற்கே இதுபோன்றவை வழிவகுக்கும்.

  ReplyDelete
  Replies
  1. சர்வ நிச்சயம் டாக்டர்.

   நன்றி.

   Delete