ஞாயிறு, 3 ஜூன், 2018

காந்தியை இழிவுபடுத்தும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர்!!!

''அவரால் காரியம் ஆகணும்னா, எளியனே, இனியனே, உத்தமனே, சத்தியனேன்னு உம்முடைய புத்தி போனபடி புகழ்ந்து தள்ளும்; இனியும் காந்தியுடன் ஒப்பிடாதீர்!''
ஆனந்த விகடனுக்கு[06.06.2018] அளித்த ஒரு பேட்டியில், ''ரஜினிகாந்த் உண்மையான காந்தியவாதி; காந்தி முன்னெடுத்துச் சென்ற எளிமை, பணிவு, அடக்கம் மூன்றும் ரஜினிகாந்திடம் இருக்கிறது'' என்று சொல்லியிருக்கிறார், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன்.

''ரஜினி உண்மையான காந்தியவாதியா? காந்தி அளவுக்கு எளிமையானவரா? பணிவு மிக்கவரா? தன்னடக்கம் கொண்டவரா?

காந்தியின் பெயரில் ஒரு இயக்கத்தை நடத்திவரும் மணியன், காந்திக்கும் உண்மைக்கும் பிறவற்றிற்கும் இருந்த உறவை முழுமையாகப் புரிந்துகொண்டிருந்தால் மேற்கண்டவாறு உளறியிருக்கமாட்டார்.

''உண்மை[சத்தியம்]யே பேசி வாழ்வேன்'' என்பது காந்தி கொண்டிருந்த முக்கியமான கொள்கைகளில் ஒன்று. 

இளம் பருவத்தில், கட்டுப்படுத்த இயலாத காம உணர்ச்சிக்கு ஆளானபோதெல்லாம், மணல் மூட்டைகளைச் சுமந்து ஓடியிருக்கிறார் காந்தி; ஜிலுஜிலு நீரில் நீண்டநெடு நேரம் குந்திக் கிடந்திருக்கிறார்.

தென் ஆப்பிரிக்கா சென்றபோது, ''மனதாலும் பிற பெண்டிரைத் தீண்ட மாட்டேன்'' என்று தாயிடம் சத்தியம் செய்தவர் காந்தி. தாய்நாடு திரும்பும்போது, தீவு ஒன்றில், கப்பல் கேப்டனின் தூண்டுதலால்  ஒரு விடுதிக்குச் சென்று  விலைமகளுடன் உடலுறவு கொள்ள ஆசைப்பட்டார். தாய்க்குச் செய்துகொடுத்த சத்தியம் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்ய, விடுதியிலிருந்து வெளியேறி, செய்யவிருந்த தவற்றிலிருந்து தப்பியிருக்கிறார். இவை, காந்தியின் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வுகள்.

தம்மை மனப்போராட்டங்களுக்கு ஆளாக்கிய இம்மாதிரியான நிகழ்வுகளை ஒன்றுவிடாமல் தம் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார் காந்தி.

தந்தை உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில் மனைவியுடன் உடலுறவில் ஈடுபட முயன்ற தம் இழிகுணத்தை நினைந்து மனம் நொந்திருக்கிறார்.

உண்மையான, சத்தியம் தவறாத வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவதில் தமக்கு உண்டான, மேற்கண்டவை போன்ற அனுபவங்களைத் தம் சுய சரிதையான 'சத்திய சோதனை''யில் காந்தியடிகள் விவரித்திருப்பதை மணியன் அவர்கள் அறிந்திருக்கக்கூடும்..

இத்தகைய காந்தியுடன்தான் நடிகர் ரஜினியை ஒப்பிட்டு,  ''உண்மையான காந்தியவாதி அவர்[ரஜினி]'' என்று மனம் கூசாமல் கதையளந்திருக்கிறார் மணியனார்.

காந்தியின் எளிமை உலகறிந்தது. கோவணத்துடன் காட்சியளித்த தமிழக விவசாயியின் கோலம் கண்டு மனம் மாறி எளிய உடைக்கு மாறியவர் அவர். சர்ச்சிலின் பார்வையில் 'அரை நிர்வாணப் பக்கிரி'. இதே அரை நிர்வாணக் கோலத்துடன் அயல்நாடெல்லாம் சென்று வந்தவர்.

ஆடம்பரத்தையும் அதீத உணவையும் வெறுத்தவர். கொஞ்சம் நிலக்கடலையும் சிறிளவு ஆட்டுப்பாலும் அவரின் ஒருநாள் உணவுத் தேவையை நிறைவு செய்தன.

இவ்வகையில், எளிய...மிக எளிய வாழ்வு வாழ்ந்த காந்தியுடன் சூப்பர் ஸ்டாரை ஒப்பிடுவதற்கான துணிவை மணியன் பெற்றது எவ்வாறு என்பது புரியவில்லை.

ராமனின் தீவிர பக்தர் என்றாலும், கடவுளின் இருப்பு, இயக்கம், இயக்குதல் குறித்தெல்லாம் ஆழ்ந்து சிந்தித்தவர் காந்தி. எனினும், கடவுள் குறித்த விவாதங்களில், தம் கருத்துக்கு ஆதரவாகப் போதிய ஆதாரங்களை முன்வைக்க இயலாதபோது, ''இதற்கு மேலும் நான் விவாதிக்க விரும்பவில்லை[ஆழம் தெரியாமல் காலை விடமாட்டேன்], என்னளவில் நான் கடவுளை நம்புகிறேன்'' என்று பணிந்து சொன்னவர் அவர். 

இவ்வகைப் பணிவுடன் செயல்படும் பண்பு ரஜினியிடமிருந்து வெளிப்பட்டதுண்டா? ''ஆம்'' எனின், அவை வெளிப்பட்ட தருணங்களை மணியன் பட்டியலிட்டிருக்கலாம். செய்யவில்லை.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது மூண்ட கலவரத்தை முடக்குவதற்காக 21 நாட்கள் உண்ணா நோன்பு மேற்கொள்வதற்கான மன உறுதியும், தவறு செய்துவிட்டோம் என்பதை உணரும்போது[ஒத்துழையாமை இயக்கம்...மக்களால் போலீஸ் தாக்கப்படுதல்...], ''இமாலயத் தவறு செய்துவிட்டேன்'' என்று வருத்தம் தெரிவிக்கும் தன்னடக்கமும் காந்தியின் குருதியில் கலந்துவிட்ட உயர் குணங்கள். 

இக்குணங்கள் ரஜினிக்கு இருப்பதை எடுத்துக்காட்டுகள் தந்து உறுதிப்படுத்தினாரல்லர் காந்தியின் பெயரால் இயக்கம் நடத்தும் அரசியல்வாதி மணியன்.

ஆக.....

காந்தியுடன் ரஜினியை ஒப்பிட்டுத் தமிழருவி மணியன் பேட்டியளித்திருப்பது, காந்தியின்மீது பற்றுக்கொண்ட பலரையும் அதிச்சிக்குள்ளாக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகமில்லை.
=====================================================================










14 கருத்துகள்:

  1. நண்பரே கடந்த பதிவில் நான் சொன்னதுபோல இவனுக்கு அவன் செய்வினை செய்து விட்டது உண்மைதான் போலும்.

    யூட்டியூபில் இவனது பேச்சைக்கேட்டு கணினியை உடைத்து விடும் நிலைக்கு ஆளாகி விட்டேன்.

    இவனது "தமிழருவி" என்ன பட்டத்தை புடுங்கி விடவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவன் செய்வினை செய்தானோ இல்லையோ, நிறைய வைட்டமின் 'ப' கைமாறியிருக்க வாய்ப்பிருக்கு.

      இப்படியே ஜால்றா அடிச்சிட்டிருந்தா பட்டம் நிச்சயமாப் பறிக்கப்பட்டுடும்.

      பதிவு எழுதி முடிக்க வழக்கத்தைவிட நேரம் அதிகம் எடுத்துக்கொண்டதால் சற்றே ஓய்வெடுத்தேன். பதில் எழுதுவதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது.

      நன்றி நண்பரே.

      நீக்கு
    2. @KILLERGEE Devakottai

      உங்களுக்கு நாகரீகமாக பேச வராதா ?

      நீக்கு
  2. காந்தியை இதைவிடக் கேவலமாக யாராலும் அவமானப்படுத்த முடியாது என்றே எண்ணுகின்றேன்

    பதிலளிநீக்கு
  3. அரசியலில் இதெல்லாம் சகஜம் என்கின்றார்களே. அந்த இதெல்லாமில் இதுவும் அடங்கும். வேதனைப்படுவதைத் தவிர என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனைப்படலாம்; அதை வெளிப்படுத்தலாம். நம்மால் வேறெதுவும் செய்ய இயலாது என்பது உண்மை.

      நன்றி டாக்டர்.

      நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. கருணாநிதி முகம்மது போல் வாழ்ந்து வருபவர் என்று ஒரு தடவை ஒரு திமுக அல்லக்கை அமைச்சர் சொல்லி முகம்மது நபி அவர்களையே அசிங்கபடுத்தி இருக்காங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைவரைப் பெருமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு இம்மாதிரியெல்லாம் பேசுவதும் எழுதுவதும் பெரும் தவறு; பல பெரும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

      தொண்டர்களைக் காட்டிலும் பதவியில் இருப்பவர்களுக்குப் பொறுப்புகள் அதிகம். நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும்.

      நன்றி Ethicalist E

      நீக்கு