எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

வியாழன், 11 ஜூலை, 2019

ஒரே அறையில் கடவுளும் கிரிக்கெட் வீரர்களும்!!!

’ரவுண்ட் ராபின்[கிரிக்கெட்] பிரிவு ஆட்டத்தில், இந்தியாவுடன் மோதிய இங்கிலாந்து வெற்றிக் கனி பறித்ததற்குக் காரணம் இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருந்த அதே அறையில் கடவுளும் தங்கியிருந்ததுதான் என்றும், இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோத நேர்ந்தால் இந்தியா வெற்றி ஈட்டக் கடவுள் உதவுவார் என்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொன்னதாகச் செய்தி பரவியுள்ளது.

நேற்று[10.07.2019] நடந்த ஆட்டத்தில்[செமி ஃபைனல்] நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோற்றுவிட்டது. 

இந்த ஆட்டத்திலான வெற்றிக்குக் கடவுள் உதவியிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

இதற்கு முந்தைய ஆட்டங்களில் வெற்றி பெற்றதற்கும், நியூசிலாந்திடம் தோற்றதற்கும் கடவுளைத் தொடர்புபடுத்தாத சாஸ்திரி இறுதி ஆட்டத்தில் மட்டும் அவர் உதவுவார் என்று சொன்னது எப்படி?

லட்சக்கணக்கிலான உயிர்களும் மனிதர்களும் கொடிய நோய்களாலும், வறுமையாலும் இன்னபிற காரணங்களாலும் நொந்து மடிந்துகொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாத கடவுள், கிரிக்கெட் அணியினருடன் ஓர் அறையில் தங்கியிருந்து உதவினாராம். 

வீரர்களுக்குப் பயிற்சியளிப்பதில் முழுக்கவனம் செலுத்தாமல், இப்படியெல்லாம் இந்த ஆள் உளறிக்கொண்டிருந்தால் இந்திய அணி தோற்பது தொடர்கதை ஆகிவிடும். இது உறுதி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக