நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து மூலப்பொருள்களால்[பூதங்கள்!] ஆனது இந்த உலகம் என்பது பழங்காலத்தில் ஏற்பட்ட புரிதல். இந்த ஐந்தும்தான் அடிப்படைப் பொருள்கள், என்று மக்கள் நம்பினார்கள்.
பிறகு, இந்த அடிப்படைப் பொருள்கள் ஐந்து அல்ல. நிறைய இருக்கின்றன என்பது புரிந்துகொள்ளப்பட்டது. ஹைட்ரஜன் முதலான தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விதம் இப்போது 118 வகைத் தனிமங்கள் உள்ளன. ஆனால், இந்த தனிமங்களும் அடிப்படைப் பொருள்கள் இல்லை என்ற புரிதல் வந்தது.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி டெமாக்ரிடஸ் இந்த உலகம் கண்ணால் காண முடியாத, பகுக்க முடியாத அணுக்களால் ஆனது என்றார். ஆனால், அவரது கருத்து எல்லோராலும் ஏற்கப்படவில்லை. பிறகு வந்த விஞ்ஞானிகள் அணுவை ஏற்றாலும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை அணுவைப் பிளக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை.
பிறகு அணுவைப் பிளக்க முடியும் என்றும், அணு அதைவிட நுண்ணிய எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான், போட்டான் போன்ற துகள்களால் ஆனது என்றும் நிரூபிக்கப்பட்டது.
நியூட்ரான், புரோட்டான் போன்ற பெரிய துகள்கள், தம்மினும் நுண்ணிய 'ஹெட்ரான்கள்' என வகைப்படுத்தப்பட்டன.
இந்த ஹெட்ரான் துகள்களைப் பிரித்தால்[பிளந்தால்?] அவை குவார்க் எனப்படும் அதனினும் நுண்ணிய துகள்களால் ஆனவை என்று பின்னர் தெரியவந்தது.
* * *
இவ்வளவும் நான் https://www.bbc.com/tamil/science-53410739 இல் படித்தறிந்து புரிந்துகொண்டது. இதற்கு மேல் எவ்வளவு சிந்தித்தாலும் எனக்கு எதுவும் புரியாது; புரிந்துகொள்ளவும் வேண்டாம். காரணம்.....
* * *
இவ்வளவும் நான் https://www.bbc.com/tamil/science-53410739 இல் படித்தறிந்து புரிந்துகொண்டது. இதற்கு மேல் எவ்வளவு சிந்தித்தாலும் எனக்கு எதுவும் புரியாது; புரிந்துகொள்ளவும் வேண்டாம். காரணம்.....
எனக்குள்ள சந்தேகத்தைக் கேள்வியாக்குவதற்கு இந்த அளவுக்கான ‘புரிதல்’ போதும்.
மேற்கண்ட, கண்டறிதல்கள் மூலம், பிளக்க இயலாதது என்று எதுவும் இல்லை என்பது உறுதியாகிறது. ஒரு காலக்கட்டத்தில், ‘குவார்க்’ எனப்படும் நுண்ணிய துகள்களயும் பிளந்து, அவை ‘துவார்க்’[கற்பனை] எனப்படும் மிக நுண்ணிய துகள்களால் ஆனவை என்று கூறவும் செய்வார்கள் விஞ்ஞானிகள்.
பின்னர், துவார்க்குகளையும் பிளந்து, அவை மிக மிக நுண்ணிய துகள்களால் ஆனவை என்று சொல்லி அவற்றிற்கும் வேறு பெயர் சூட்டவும்கூடும்.
இந்தப் ‘பிளப்பு’ வேலையை மனிதகுலம் உள்ளளவும் விஞ்ஞானிகள் செய்துகொண்டே இருப்பார்கள். காரணம், இதுவரை அறிவியலாளர் பெற்ற அனுபவங்கள், பிளக்க முடியாதது என்று எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதால்.
ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில், தாம் கடைசியாகக் கண்டறிந்த துகள்களை, ”இவை பிரிக்க முடியாத துகள்கள்; இவையே கடவுள் துகள்கள்” என்று அவர்கள் அறிவிப்பார்களேயானால், அது, கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துவோர்க்குப் பேருதவியாக அமையவும்கூடும். ஹி...ஹி...ஹி!
====================================================================================
====================================================================================