அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

சாமி சரணம்! ‘கொரோனா தேவி’ சரணம்!!

#கேரளாவில் ‘கொரோனா தேவி’ ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது. கொரோனாப் போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தப்படுகிறது.
பதிவு: ஜூன் 13,  2020 11:53 AM  ...நன்றி: ‘தினத்தந்தி’ நாளிதழ்.     

கோயிலுக்குப் போய், ‘சாஷ்டாங்கமா’ விழுந்து கும்பிட்டுத் தரிசனம் பண்ணுறதில் கிடைக்கிற ‘ஆத்ம திருப்தி’, வீட்டிலிருந்து  இஷ்ட தெய்வங்களை வழிபடுவதில் கிடைக்காது என்பது நம் மக்களின் நம்பிக்கை. 

கொரோனாத் தாக்குதலால் மூடிக்கிடந்த அத்தனைக் கோயில்களும் இப்போ திறந்தாச்சி. இனி ஆசைப்பட்ட அத்தனை சாமிகளையும் நேருக்கு நேர் தரிசனம் பண்ணுறதுக்கு எந்தவொரு தடையும் இல்ல. அதனால.....

வீட்டோட முடங்கிக் கிடந்து 150 நாட்களுக்கு மேலாகப் பரிதவிப்புக்கு உள்ளான நம் மக்கள், மறந்தும் வீட்டோட இருந்துடாம அக்கம் பக்கத்தில் இருக்கிற அத்தனை  சாமிகள்கிட்டேயும் தங்களுடைய மனக்குறைகளைச் சமர்ப்பணம் பண்ணிடுவாங்க.

‘ஐந்து மாதங்களுக்கு மேலாக, கொரோனாவின் கோரத் தாண்டவத்தைக் கண்டுகொள்ளாத சாமிகளெல்லாம் இனிமேல் மட்டும் கண்டுகொள்ளுமா?’ என்னும் சந்தேகத்துக்குக் கிஞ்சித்தும் மனசுல இடம் தந்துவிட மாட்டார்கள். 

ஒரு வேளை இந்தச் சாமிகளெல்லாம் கண்டுக்காம இருந்துட்டாலும், கொரோனா மாதிரியான நச்சுக் கிருமிகளையெல்லாம் அடக்கி ஆளுற ‘கொரோனா தேவி’ங்கிற பெண் தெய்வத்தைத் தொழுது, “எங்களைத் தண்டிச்சது போதும். நாங்க செஞ்ச தப்புத்தண்டாவை எல்லாம் மன்னிச்சிடு தாயே”ன்னு மக்கள் வேண்டிகிட்டாங்கன்னா, கொரோனாக் கிருமி பூண்டோடு அழிஞ்சிடும்.
(நன்றி: தினத்தந்தி)

இந்தக் கொரோனா சாமியைக் கண்டறிஞ்சி சொன்னதோடு, அதுக்கு நாள் தவறாம பூஜை செஞ்சி புண்ணியம் தேடிக்கொண்டவர் கடவுள் தேசத்தைச் சேர்ந்த ஒரு கோயில் பூசாரி.

அவர் வழிபடுற அந்தக் ‘கொரோனா தேவி’ சாமிதான் இப்போ இந்தப் பதிவுக்கு அழகு சேர்க்குது.

நீங்க விரும்பினா தரிசனம் பண்ணலாம்.

சாமி சரணம்! கொரோனாதேவி சரணம்!!
=====================================================================