பறவைகளைப் பொருத்தவரை, 'ஒருவன் - ஒருத்தி' என்னும் ஒழுக்க நெறியைப் பின்பற்றி வாழ்கின்றன[விதிவிலக்கானவை?]. இவை, தேர்ந்தெடுத்த துணையுடன் வாழ்நாள் முழுக்க இணைந்தே இருக்கும். இது இயற்கை நெறி.
ஆனால், விலங்குகளின் 'இணை சேர்தல்' முறை இதற்கு நேர்மாறானது. ஆடு, மாடு, புலி, சிங்கம் என்று அனைத்து விலங்குகளுமே பருவ மாறுதலுக்கேற்ப, கிடைத்த துணையுடன் உறவு கொள்கின்றன['மான்கள் இணைபிரியாமல் வாழும்' -'ஐந்திணை ஐம்பது'].. இதுவும் இயற்கை நெறியே ஆகும்.
மனிதர்கள் விலங்கினத்தைச் சார்ந்தவர்கள். சிந்திக்கும் அறிவு வாய்க்கும்வரை இணைசேர்வதில் எவ்விதக் கட்டுப்பாடுகளையும் பின்பற்றாதவர்கள்.
உடலுறவு சுகத்திற்காகப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் நிலவிய கடும் போட்டி காரணமாக, மோதல்களும் உயிர்ச் சேதங்களும் காலங்காலமாய் நிகழ்ந்துகொண்டிருந்தன. சமுதாய அமைப்பு உருவான பின்னர், இது விசயத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன; திருமணம் புரிந்து இருவர் இணைந்து வாழும் முறை தோன்றியது. 'ஒருவன்-ஒருத்தி' என்று வாழும் கற்பு நெறி புகுத்தப்பட்டது; போற்றப்பட்டது[பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர்{சான்றோர்} யாத்தனர் கரணம்{திருமணம் முதலான கட்டுப்பாடுகள்/சடங்குகள்} என்ப' -தொல்காப்பியம், கற்பியல்].
கட்டுப்பாடுகள் பலவும் செயற்கையாக உருவாக்கப்பட்டதால்தான் விலங்குகள் போல வாழும் மனிதர் எண்ணிக்கை இன்றளவும் பெருமளவில் உள்ளதற்கான காரணம் ஆகும்.
இன்னும் விலங்குகளாகவே வாழும் மனிதர்களுக்கிடையே, விலங்கினத்தைச் சார்ந்த சாம்பல் ஓநாய்கள் 'ஒருவன்-ஒருத்தி' என்னும் நெறிப்படி, துணைக்குத் துரோகம் செய்யாமல் வாழ்கின்றன என்பது பெரும் வியப்புக்குரிய உண்மையாகும்.
பாலூட்டி வகையைச் சேர்ந்த இந்தச் சாம்பல் நிற ஓநாய்கள் கூட்டுக்குடும்ப முறையில் வாழ்பவை. முப்பது என்னும் எண்ணிக்கைவரை இணைந்து வாழும் இயல்பு கொண்டவை. ஆணும் பெண்ணுமாய் இணைந்து வாழ்ந்தாலும், இந்தக் கூட்டத்தில் தலைவன், தலைவி மட்டுமே இணை சேர்ந்து அடுத்த தலைமுறையை உருவாக்குகின்றனவாம்.
இந்தச் சாம்பல் நிற ஓநாய்களிடம் இன்னொரு பண்பும் உண்டு. இரை வேட்டையாடப்பட்டதும் தலைவனும், தலைவியும் முதலில் சாப்பிடுவார்கள். அதன் பின்னரே மற்ற விலங்குகள் சாப்பிடுமாம்!
===============================================================
தொடர்புடைய பதிவு[2.12.2012இல் எழுதியது]:
https://kadavulinkadavul.blogspot.com/2012/10/blog-post.html